புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 28, 2021)

பருவங்களும் காலங்களும்

சங்கீதம் 34:1

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.


மனிதனானவன் தன் வாழ்க்கை வட்டத்திலே பல பருவங்களை கடந்து செல்கின்றான். குழந்தையாக பிறந்து, பிள்ளையாக வளர்ந்து, வாலிப பிரயாயத்தை அடைந்து, பின்பு திருமணமாகி, குடும்பமாகி, வயோதி பத்தை அடைகின்றான். அவனுடைய ஒவ்வொரு பருவத்திலும், உயர் வான நேரங்களையும், தாழ்வான நேரங்களையும், வனாந்திரம் போன்ற அனுபவங்களையும், மலை போன்ற தடைகளையும், கண்ணீரின் பள்ளத்தா க்குகளையும், அக்கினியில் நடந்து செல்லும் காலங்களையும் கடந்து செல் கின்றான். ஒவ்வொன்றிற்கும் ஒவ் வொரு காலமுண்டு; வானத்தின் கீழி ருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடன ம்பண்ண ஒரு காலமுண்டு என்று பிரசங்கி மனிதனுடைய வாழ்க் கையில் ஏற்படும் காலங்களை நேர்த்தியாக வர்ணித்துக் கூறியிருக்கி ன்றார். ஆனால் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரிப்பதற்கும், அவரை போற்றித் துதிப்பதற்குமுரிய பருவம் எது? காலம் எது? காலங்கள் மாறிப் போகலாம், மனிதர்கள் மாறிப் போகலாம் ஆனால் என்றும் மாறாத தேவன் எப்போதும் இருக்கின்றவராகவே இருக்கின்றார். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். ஆதலால் கர்த்தரை நாம் எக்காலத்திலும் ஸ்தோத்திரிக்க வேண்டும். அவர் துதி எப்போதும் நம்; வாயிலிருக்க வேண்டும். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பய த்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவி ல்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனு~ன் பாக்கியவான்” என்று தேவ பக்த னாகிய தாவீது தன் வாழ்க்கை அனுபவத்தை பாடலாக பாடியுள்ளார். நாமும் எல்லா சூழ்நிலைகளிலும் அவரை ஸ்தோத்தரிப்போம்.

ஜெபம்:

என்றென்றும் மாறாத தேவனே, எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும் நான் உம்மை மறந்து போகாமலும், எல்லா சூழ்நிலைகளிலும் உம்மைத் துதிக்கும் உள்ளத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 9:1-2