புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 27, 2021)

திருவசனத்தைக் கைக்கொள்ளுங்கள்

யாக்கோபு 1:22

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.


ஒரு மாணவனானவன் தன் ஒன்பதாம் வகுப்பின் முதலாம் தவணைப் பரீட்சையில் பல பாடங்களிலே குறைந்த புள்ளிகளையே பெற்றிருந்த தால், அவனுடைய பெற்றோர் அவன் முன்னேற்றத்திற்காக பல முயற்ச் சிகளை எடுத்தார்கள். அவர்களுடைய வீட்டின் அருகிலுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர், அவனுக்கு உதவுவதற்காக முன் வந்தார். அந்த மாணவனும் அவனுடைய பெற்றோரும் அதைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார்கள். அந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், மாணவனை யும் அவனுடைய பெற்றோரையும் அழைத்து அவர்களோடு பேசி, அவ ர்களுக்கு சில ஆலோசனைகளை கூறினார். அதன்படி, இந்த ஆண்டு முடிவுக்குள், நல்ல முன்னேற்றத்தை காணும்படிக்கு, அந்த மாணவன் வீட் டிலே செய்யவேண்டிய காரியங்க ளையும், அவனுடைய பெற்றோர் கொடுக்க வேண்டிய ஒத்தாசையையும் குறித்து எடுத்துரைத்தார். அனு தினமும் மாலை வேளையில் அந்த மாணவனுக்கு ஒரு மணிநேரம் பாடம் சொல்லிக் கொடுத்தார். மாலை வகுப்புக்கள் நன்றாகவே சென்று கொண்டிருந்தது ஆனால் மாணவனுடைய படிப்பில் முன்னேற்றத்தை காணமுடியவில்லை. ஏனெனில், அந்த ஆசிரியர் கூறிய அறிவுரையின்படி அவன் வீட்டில் பாடங்களை படிப்பதில்லை. அவன் பெற்றோரும் அதைக் குறித்து பெரிதாக அக்கறை எடுக்கவில்லை. பிரியமானவர்களே, “ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவை களின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை. ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.” என்று ஆண்டவராகிய இயேசு கூறினார். இது யாவருக்கும் பிடித்த ஒரு அருமையான வாக்குத்தத்தம். இந்த வார்த்தையை சற்று சிந்தித்துப் பாருங்கள். 1. ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தைகளை கேட்க வேண்டும். 2. கேட்ட வார்த்தைக ளின்படி செய்ய வேண்டும். 3. அப்போது, நம்முடைய வாழ்க்கை கன் மலையில் கட்டப்பட்ட உறுதியுள்ள வீட்டைப் போல அசையாதிருக்கும். எனவே, தேவ வார்த்தைகளை கேட்டு, அந்த வார்த்தைகளை நாம் நம் வாழ்க்கையில் கைக்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

ஆலோசனைகளின் கர்த்தாவே, நான் என் வாழ்வில் முன்னேறு ம்படிக்கு, உம்முடைய வார்த்தைகளை கேட்டு, தியானித்து, அவைகளை என் வாழ்வில் நான் கைக்கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 3:5-6