புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 26, 2021)

கர்த்தரை நம்பினோர் பாக்கியவான்கள்

எண்ணாகமம் 23:19

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல


இந்தப் பூமியிலே வாழும் மனிதர்கள் பல வாக்குகளை மற்றவர்களுக்கு கொடுக்கின்றார்கள். குடும்பங்களிலே, குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரு க்கொருவர் வாக்குகளை கொடுக்கின்றார்கள். உறவினர் நண்பர்களுக்கி டையிலே “நான் இதை உனக்காக செய்து முடிப்பேன்” என்று வாக்கு பண்ணுகின்றார்கள். இன்னுமாய் வேலை செய்யும் இடங்களிலும், கல்வி நிலையங்களிலும் மனிதர்கள் வாக்கு கொடுக்கின்றார்கள். இன்னு மாய் தேர்தல் நாட்களிலே அரசு அதி காரிகளும் பல வாக்குகளை கொடுக் கின்றார்கள். இவர்கள் சிலர் தாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றி முடி க்க மனதுள்ளவர்களாக இருந்தாலும் அவைகளை நிறைவேற்றி முடிக்க முடி யாமல் மட்டுப்படுத்தப்பட்டவர்களாகி விடுகின்றார்கள். வேறு சிலர், காலப்போக்கில் தாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மனதில்லாதவர்களாக மாறிவிடுகின்றார்கள். இன் னும் சிலர், இந்தப் பூமியை விட்டு கடந்து சென்றுவிடுகின்றார்கள். ஆனால் வாக்குரைத்த தேவனாகிய கர்த்தர் இருக்கின்றவராய் இருக்கி ன்றார். பொய் சொல்ல அவர் ஒரு மனு~னல்ல, மனம் மாற அவர் ஒரு மனு புத்திரனுமல்ல. கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், வாழ்க்கையிலே இனி மறுமலர்ச்சி வருவதற்கு சாத்தியங்கள் ஏதும் இல்லை என்பது போன்ற நிலையிலே வாழ்க்கை இருந்தாலும், கர்த் தரை நம்பினோர் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. “கர்த்தரு க்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலை யின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனு~ன் பாக்கியவான்.” என்று ஒரு தேவ பக்தன் தன் வாழ்க்கையின் அனுபவ சாட்சியை பாடலாக பாடியிருக்கின்றார். பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? அவர் வாக்குரைத்த வைகளை நிச்சயமாகவே நிறைவேற்றி முடிப்பார்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறா தவராகவே இருக்கின்றீர். உம்முடைய வாக்கை நம்பி நான் அதன்படி உமது வேளைக்காக காத்திருக்கும்படி பொறுமையைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:8