தியானம் (சித்திரை 25, 2021)
கிறிஸ்துவை உடையவர்கள் யார்?
ரோமர் 8:9
கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ஒரு வீட்டிற்கு இரவு உணவிற்காக வந்திருந்த விருந்தாளியொருவர், இந்த தோடம்பழம் (Orange) பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கின் றதே, ஆனால் இதன் சுவை மரத்திலிருந்து பிடுங்கி சாப்பிடும் தோட ம்பழம் போல இல்லையே என்று தன் நண்பரிடம் கூறினார். நண்பர் மறுமொழியாக: இது இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழம், மரத்தி லிருந்து பிடுங்கப்பட்ட நாளிலிருந்து இங்கு வருவதற்கு சுமார் இரண்டு வார ங்கள் ஆகும் என்றும் அதுமட்டுமன்றி அது கெட்டுப்போகாமல் பாதுகாப்ப தற்காக சந்தை முகவர்கள் பல ஏற் பாடுகளை செய்கின்றார்கள். அதனால், அதன் சுவையும், அதன் ஊட்டச் சத் துக்களும் குறைந்து விடுகின்றது என்றும் பதில் கூறினார். பிரியமான சகோதர சகோதரிகளே, இன்றைய நாளிலே கிறிஸ்தவ வாழ்க்கையா னது பார்வைக்கு அழகாய் இருந்தால் போதுமா என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். ஆதிச் திருச்சபையிலே, முதல் முதல் அந்தியோ கியாவிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்குக் கிறிஸ் தவர்கள் என்கிற பெயர் வழங்கப்பட்டது. அப்படியாக கிறிஸ்தவர்களாக இருந்தவர்களின் தன்மைகள் என்ன? அவர்களுடைய வாழ்க்கையிலே, உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாச மோசமோ, பட்டயமோ, உயர்வோ, தாழ்வோ இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் அவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சுபாவங் களையே மரண பரியந்தம் தம்முடைய வாழ்க்கையின் சாட்சி வழியாக வெளிக்காட்டினார்கள். இன்று சில மனிதர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று காண்பிக்கும் பொருட்டு கிறிஸ்தவ பெயர்களை வைத்துக் கொள கின்றார்கள், சில அடையாளங்களை தங்களிலும் தாங்கள் ஓட்டிச் செல் லும் மோட்டார் வண்டிகளிலும் மாட்டிக் கொள்கின்றார்கள். ஆலயத்தி ற்கு செல்கின்றார்கள், செல்லும் போது கைகளிலே பரிசுத்த வேதாக மத்தை தூக்கிச் செல்கின்றார்கள். அவைகளில் தவறு ஏதும் இல்லை. இவைகள் பார்வைக்கு அழகான காட்சி. ஆனால் அவைகளைச் செய்வ தினால் நாம் கிறிஸ்துவை உடையவர்கள் (கிறிஸ்தவர்கள்) ஆக மாறிவிட முடியாது. கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள் அவரைப் போல தங்கள் வாழ்க்கையின் நற்சாட்சிகளால் பரலோகத்திலிருக்கிற பரம பிதாவை மகிமைப்படுத்துவார்கள். அவர்கள் எப்போதும் பிதாவின் சித்தத்தை தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும்படி வாஞ்சையுள்ளவர் களாக இருப்பார்கள். அவர்களிலே பரம பிதா பிரியமாக இருப்பார்.
ஜெபம்:
இருதயத்தை ஆராய்ந்தறிகின்ற தேவனே, என் வாழ்க்கை உமக்கு பிரியமுள்ளதாக இருக்கும்படிக்கு, எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவி லிருந்த சிந்தையே என்னிலும் இருக்கும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 4:6