புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 24, 2021)

இல்லாமற்போகும் பொருள்

நீதிமொழிகள் 23:5

இல்லாமற்போகும் பொரு ள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுக ளைத் தனக்கு உண்டுபண் ணிக்கொண்டு, ஆகாய மார் க்கமாய்ப் பறந்துபோம்.


ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண் களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசரு வையும் கண்டான் என்று ஆண்டவராகிய இயேசு கூறினார். பிரியமானவர்களே, இந்த சம்பவத்திலே, மூன்று மனிதர்களின் நிலையை குறி த்து குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 1. விசுவாசத்தின் தந்தை என்று அழை க்கப்படும் ஆபிரகாம் என்ற மனிதன் 2. பூமியிலே தரித்திரனாகவும் நோய் கொண்டவனுமாக இருந்த லாசரு 3. சுகபோகமாக பூமியிலே வாழ்ந்த ஐசுவரியவான். ஆபிரகாம் என்னும் மனிதனானவனை, தேவன் அழைத்த போது, அவன் நிபந்தனையேதுமின்றி கீழ்ப்படிந்தான். தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, வாக்குத்தத்தம் நிறைவேறும்படி காத்திருந்தான். லாசரு இந்த பூமியிலே அற்பமாக எண்ணப்பட்டவனும், தீமை அனுபவித்தவனுமாக இருந்தான். ஐசுவரியவான், இந்த பூமியிலுள்ள தேவ ஊழியர்கள் கூறும் சாட்சியை அசட்டை செய்கின்றவனாக இருந்தான்; (லூக்கா 16:20). பிரியமானவர்களே, இன்று பல மனிதர்கள் செல்வம், சுகம், பேர், புகழோடு வாழ்வதையே விரும்புகின்றார்கள். ஆனால் மரணம் ஒருநாள் அவர்களை சந்திக்கும் என்பதையும், அதன் பின்பு, நித்திய நித்தியமாக அவர்கள் பரலோகத்திலோ அல்லது பாதாளத்திலோ இருப்போம் என்பதை சிந்திக்க அவர்களுக்கு மனதில்லை. தேவனற்றவர்களாய் திரளான ஐசுவரியத்தோடு வாழ்ந்து, பாதாளத்திலே இறங்குவதைவிட, கர்த்தருக்கு சித்தமானால் இந்த பூமியிலே தரித்திரனாக வாழ்ந்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதே மனிதனுக்கு நல்லது.

ஜெபம்:

நித்தியமான தேவனே, இந்த உலக ஆஸ்திகளிலே கண்களை வைத்து, உம்முடைய திவ்விய ஆசீர்வாதங்களை நான் இழந்து போகாதபடிக்கு, உம்மிலே நிலைத்திருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 41:17