புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 23, 2021)

சேர்த்து வைத்தவைகள் எவை?

நீதிமொழிகள் 20:7

நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.


பூரண வயதையுடைய ஒரு தகப்பனானவர் வியாதிப்பட்டிருந்தார். பூமியிலே தன்னுடைய வாழ்நாட்கள் முடிவடையும் நாட்கள் சமீபித்திரு க்கின்றதென்பதை அறிந்திருந்த அவர், தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தார். வாழ்நாள் முழுவதும், உண்மையும் உத்தமமுமாக எளிமையான வீட்டிலேயே வசித்த வந்த அவரிடம், பிள்ளைகளுக்கென விட்டுச் செல்ல இந்த உலக ஆஸ்திகள் ஏதும் இல்லை. “நான் உங்களுக்கெ ன்று எதையுமே சம்பாதித்து வைக்க வில்லை, ஆனால் என்னுடைய நாட்கள் முடிவடையப் போகின்றது” என்று தன் னுடைய பிள்ளைகளிடம் கூறினார். அவ ருடைய மகள் மறுமொழியாக: அப்பா, நிலையற்ற இந்த உலக ஆஸ்திகள் எங்களிடமில்லை ஆனால் ஒரு நீதிமான் எப்படியாக நிலையான தேவனிலே நிலைத்திருந்து வாழ்வான் என்பதை உங்கள் வாழ்க்கை முறையினால் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றீர்கள். கர்த்தரோடு எங்களை இணைத்திருக்கின்றீர்கள். எனவே நாங்கள் அசைக்கப்படுவதில்லை” என்று கூறினாள். பிரியமானவர்களே, இன்றைய நாளிலே நீங்கள் “சேர்த்து வைத்தவைகள் எவை” என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதனா னவன் தன்னிடமுள்ள மிகையான பணத்தை தன் எதிர்காலத்திற்கென்று ஒரு நிலையான வங்கிக் கணக்கிலே சேர்த்து வைத்தான். இன்னுமொரு மனிதனானவன், தன்னிடம் மிகையாய் இருந்ததை, இன்றைய நாளிலே வறுமையிலே வாடிடும் வறியவர்களுக்கு கொடுத்தான். வங்கியில் சேர்த்து வைத்தவனின் கணக்கு அந்த வங்கியோடு இருந்தது. ஆனால் ஏழைகளுக்கு வாரியிறைத்தவனின் கணக்கு தேவனோடு இருந்தது. (நீதிமொழிகள் 19:17, சங்கீதம் 112:9). இவைகளைக் குறித்து பலரும் பலவிதமாக விவாதித்துக் கொள்வார்கள். ஆனால் உங்களுடைய இருத யம் இவைகளைக் குறித்து என்ன சொல்கின்றது? உங்களுடைய கணக்கு யாரோடு இருக்கின்றது? வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத் தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. தனக்கென்றும் தன் சந்ததிக்கென்றும் சேர்த்து வைக்கின்றவனின்மேல் யாருடைய கண்கள் நோக்கமாயிருக்கும்? (லூக்கா 12:16-21). இவைகளை ஆராய்ந்து அறிந்து, நிலையானவை களை நீங்கள் பற்றிக் கொள்ளும்படிக்கு நிலையான தேவனிலே நிலை த்திருங்கள்.

ஜெபம்:

நித்தியமான தேவனே, இந்த உலக ஆஸ்திகளிலே கண்களை வைத்து, உம்முடைய திவ்விய ஆசீர்வாதங்களை நான் இழந்து போகாதபடிக்கு, உம்மிலே நிலைத்திருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 12:16-21