புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 22, 2021)

விட்டு வந்தவைகள்

எபிரெயர் 11:14

இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.


கர்த்தர் ஆபிராம் (பின்பு ஆபிரகாம் என்று பெயர் பெற்றவர்) என்ற மனிதனை அழைத்த போது, அவனுக்கு 75 வயதும், அவன் மனைவியாகிய சாராய் (பின்பு சாராள் என்று பெயர் பெற்றவள்) 65 வயதுள்ளவர்களுமாய் இருந்தார்கள். ஆபிரகாமிற்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமானது, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாத மாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதி க்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன் னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமி யிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்பதாகும். அந்த வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததியானது அவன் மனைவியாகிய சாராய் வழி யாக உண்டாகும் என்று உரைக்கப்பட்டது. அன்றைய உலகிலே, ஆபி ரகாம் சாராயின் வயதுக்கொத்த தம்பதிகளுக்கு பல பிள்ளைகளும், பேர ப்பிள்ளைகளும் இருந்திருப்பார்கள். ஆனால், ஆண்டுகள் கடந்து சென்று, ஆபிரகாம் 99 வயதுள்ளவனும், அவன் மனைவியாகிய சாராள் 89 வய துள்ளவளுமாக இருந்தபோதும் அவர்கள் இருவருக்கும் ஒரு பிள்ளை யும் இருந்ததில்லை. ஆனால், ஆபிரகாம் கர்த்தரின்மேலுள்ள விசுவா சத்தில் உறுதியாய் நிலைத்திருந்தான். ஆபிரகாம் மரிக்கும் போது, அவனுக்கு 175 வயதாக இருந்தது. அந்த வேளையிலே, அவனுக்கு சாராள் வழியாக பிறந்த ஈசாக் என்ற ஒரு மகனும், ஈசாக்குக்கு இரண்டு குமாரர்களுமே இருந்தார்கள். இன்று அவர்களுடைய சந்ததி கடற்கரை மணலைப் போல பெருகியிருக்கின்றது. நாமும் கிறிஸ்து வழியாக ஆபிரகாமின் சந்ததியாக்கப்பட்டிருக்கின்றோம். இவர்களெல்லாரும், வாக் குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை, தங்கள் மாம்ச கண்களால் காணாமல், விசுவாசக்கண்களாலே அவைகளைக் கண்டு, நம்பி அரவணைத்துக் கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். ஆண்டுகள் கடந்து சென் றாலும், தாங்கள் இந்த பூமியிலே இழந்து போனவைகளையும், தாங் கள் விட்டுவந்தவைகளையும் ஒருபோதும் நினையாதிருந்தார்கள். ஏனெ னில் பூமிக்குரியவைகளையல்ல , அதிலும் மேன்மையான பரமதேசத்தை யே விரும்பினார்கள்;. பிரியமானவர்களே, விட்டு வந்தவைகளையும், இழ ந்து போனவைகளையும் சிந்திக்காமல், நாம் நாடித் தேடுகின்ற பரம தேச த்தையும் அதன் மேன்மையையுமே சிந்தித்து அறிக்கையிடுவோமாக.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, நீர் சொன்னதை செய்து முடிப்பவர். நீர் செய்ய நினைத்ததை ஒருவரும் தடுக்க முடியாது என்பதை நான் ஒரு போதும் மறந்து விடாதபடி என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 12:13