புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 21, 2021)

இடறலடையாதிருங்கள்

மத்தேயு 11:6

என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.


யோவான்ஸ்நானன் என்ற தேவ ஊழியர், மீட்பராகிய இயேசுவுக்கு வழியை ஆயத்தம் பண்ணும்படி, முன்னோடியாக வந்தார். ஆவியா னவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே வாக்களிக்கப்பட்ட மீட்பர் (மெசியா) என்று தேவன்தாமே அவருக்கு சொல் லியிருந்தார். அந்தப்படியே, யோவான்ஸ்நானன், தேவ ஆவி புறாவை ப்போல இயேசுவின் மேல் இறங்கு வதை நான் கண்டு, இயேசுவே தேவ னுடைய குமாரன் என்று சாட்சி கொடு த்துவருகிறேன் என்றார். அந்நாட்க ளிலே யூதேயாவை ஆட்சிசெய்த ஏரோது ராஜாவின் நெறிமுறையற்ற வாழ்க்கையை குறித்து யோவான் ஸநானன் கண்டித்திருந்ததால், ஏரோது ராஜா யோவான் ஸநானனை கைது செய்து சிறையிலே வைத்திருந்தான். அத்தருணத்தில் யோவான் ஸநானன் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து: வாக்களிக்கப்பட்ட மேசியா நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று இயேசுவினிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;. குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். பிரியமானவர்களே, சில வேளைகளிலே இப்படிப்பட்ட கேள்விகள் நம்முடைய சிந் தையிலும் அவ்வப்போது தோன்றலாம். மற்றவர்களுடைய வாழ்;க்கை யின் செழிப்பையும் என் வாழ்க்கையில் நடக்கும் காரியங்களையும் நான் பார்க்கும் போது, நான் இத்தனை வருடங்களாக ஆண்டவராகிய இயேசுவை பின்பற்றினேனே, என் இளமைக் காலத்தையும் வாலிப நாட்களையும் இயேசுவின் நற்செய்திக்காக இழந்து விட்டேனே, எத்தனை யோ நெருக்கங்கள் மத்தியிலும் பல தியாகங்களோடு கர்த்தரை சேவி த் தேனே, நான் அப்படி செய்தது சரியா அல்லது நான் விருதாவாக அப்படிச் செய்தேனா? என்ற மனப் போராட்டங்கள் உண்டாகலாம். இடறலடைந்து போய்விடாதிருங்கள். இயேசுவை நம்பினோர் பாக்கியம் பெற்றவர்கள். கெம்பீரத்தோடு அறுவடை செய்யும் நாட்கள் சமீபித்திருக் கின்றது. ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.

ஜெபம்:

பெலப்படுத்தும் தேவனே, கலப்பையில் கை வைத்தவன் திரும் பிப் பார்க்கக்கூடாது என்ற பிரகாரமாக, இந்த உலகிலே என்ன நடந்தாலும் நான் உம்மிலே உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 9:62