புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 20, 2021)

இரக்கமுள்ளவர்களாயிருங்கள்

லூக்கா 6:36

ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக் கமுள்ளவர்களாயிருங்கள்


ஒரு மனிதனானவன், பல ஆண்டுகளாக மீட்பின் நற்செய்தியை கேட்டி ருந்தும், அந்த நற்செய்தியையோ அவன் அசட்டை செய்து தன் கல்வி, அந்தஸ்துகளினால் அவனுக்கு உண்டான பெருமையின் கட்டுக்களிலே வாழ்ந்து வந்தான். தனக்கு நற்செய்தியை கூறும்படி வருபவர்களின் ஏழ்மை நிலையை சுட்டிக்காட்டி, அவ ர்களை பரியாசம் செய்தும் வந்தான். சில ஆண்டுகளுக்குப் பின், அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கமான சூழ்நிலையில், ஆண்டவராகிய இயே சுவின் அன்பை உணர்ந்து கொண் டான். அவன் மனக்கண்கள் பிரகா சமடைந்தது. உன்னதரின் அன்பை உணராமல், வாழ்க்கையில் பல ஆண் டுகளை வீணடித்து துரோகியாக வாழ்ந்து வந்தேன் என்று மனம் வரு ந்தி, தன் பாவங்களை ஆண்டவராகிய இயேசுவிடம் அறிக்கையிட்டு, தன் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்தான். அவன் இரட்சிப்படைந்த பின்னர். தன் உறவினருக்கும் நண்பர்களுக்கும் தான் கண்டு கொண்ட இயேசுவின் அன்பைக் குறித்து கூறிவந்தான். அவர்கள் அவனை பரியாசம் செய்யும் போது, அவர்களை கடிந்து கொள்ளாமல், “என்மேல் நீடியபொறுமையாக இருந்த ஆண்டவரே, இவர்களுக்கும் இரங்கும்” என்று தன் மனதில் சொல்லிக் கொள்வான். அவர்களின் மனக் கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்வான். பிரியமானவர்களே, மற்றவர்களுடைய நிலையை அறிந்து கொள்ளும் அறிவில் வளர்வது ஆவிக்குரிய வாழ்வின் ஒரு முக்கியமான பகுதி. அதாவது, மற்றவர்களோடு பேசி, நாம் அறிய அவசியமில்லாத மற்ற வர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறித்த சம்பவங்களையும், இர கசியங்களையும் அறிந்து கொள்வதல்ல. மாறாக, சூழ்நிலைகளினால் நெருக்கப்பட்டு ஒருவன் பெலவீனம் அடைந்திருக்கும் போது, அவனை நியாயந்தீர்க்காமல், எனக்கேற்பட்ட பெலவீனங்களையும் அந்த நேரங்க ளிலே கர்த்தர் என்மேல் எவ்வளவாக நீடிய பொறுமையுள்ளவராக இருந்தார் என்பதையும் உணர்ந்து, தற்போது பெலவீனப்பட்டிருக்கும் மற்றவர்களுக்காக நீடிய பொறுமையோடு ஜெபிக்க வேண்டும். தவறு கள் குற்றங்கள் நடக்கும் போது அவைகளை நல்மனதோடு சுட்டிக் காட்டுவது நல்லது. ஆனால் நாம் அந்த நிலையிலே இருந்துவந்த நாட்களையும், இனியும் அப்படிப்பட்ட நிலைகள் நம் வாழ்வில் ஏற்பட லாம் என்பதையும் மறந்து விடாதிருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என்னுடைய தப்பிதங்களுக்குதக்கதாக நீர் சரிக்கட்டாமல், உம்முடைய கிருபையினால் என் பாவங்களை மன்னித்தீர். நானும் இரக்கமுள்ளவனா(ளா)க இருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:23-35