புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 19, 2021)

திடனற்றவர்களைத் தேற்றுங்கள்

1 தெச 5:14

ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.


மூன்றாம் வகுப்பில் படிக்கும் தன்னுடைய தங்கை, கணித பாடத்திலே கொடுகக்ப்பட்ட சில கணக்குகளைக் குறித்து மிகவும் குழப்பமடைந்திருந்தாள். பல முறை முயற்ச்சித்தும், சில விடயங்கள் அவளுக்கு நன்றாக புரியவில்லை. அதைக் கண்டு கொண்ட, பத்தாம் வகுப்பு படிக்கும் அவளுடைய அண்ணன், அவளைப் பார்த்து: இந்த சின்னக் கணக்குகள் கூட உனக்கு புரியவில் லையா? இப்படி இருந்தால் அடுத்த வகுப்புக்களில் என்ன செய்யப் போகி ன்றாய் என்று அவளை கடிந்து கொண் டான். அவர்களுடைய தாயார் அவனை நோக்கி: மகனே, மூன்றாம் வகுப்பு கணக்கை, ஏழு வருடங்களுக்கு பின் நீ திரும்பிப் பார்க்கும் போது உனக்கு அது இலகுவாக இருக்கின்றது. ஆனால் நீ மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, உன் தங்கச்சியை பார்க்கிலும் கஷ்ட ப்பட்டாய். அந்தந்த வகுப்புக்குரிய பாட ங்கள் அந்ததந்த வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு கடினமாகத் தோன்றும் என்று பதில் கூறினாள். மேலும் அவள் தன்னுடைய மகளைப் பார்த்து: மகளே, நீ பாலர் வகுப்புக்கு முதன் முறை சென்ற போது, பத்து வரைக்கும் எண்ணுவது உனக்கு எப்படி இருந்தது என்று கேட்டாள். மிகவும் கடினமாக இருந்தது என்று கூறினாள். தாயார்: இப்போது பத்து வரைக்கும் எண்ணுவது எப்படி இருக்கின்றது என கேட்டாள். அதற்கு மகளானவள்: மிகவும் சுலபமாக இருக்கின்றதே என்றாள். அதுபோலே இன்னும் ஒரு வருடத்தில் மூன்றாம் வகுப்பு பாடங்கள் உனக்கு இலகு வாக இருக்கும் என்று அவளை திடப்படுத்தினாள். பிரியமானவர்களே, புதிதாய் பிறந்த குழந்தையை, எழுந்து நட, ஓடு என்று ஒருவரும் கூறுவ தில்லை அல்லது பெரியவர்கள் உண்ணும் காரமான உணவு பண்ட ங்களை உண்ணும்படி குழந்தைகளுக்குத் திணிப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் வளர்ந்து முதிர்ச்சி நிலையை அடையும் போது, அவை களை அவர்கள் செய்து கொள்வார்கள். எனவே, பல ஆண்டுகளாக கர்த்தருக்குள் வளர்ந்து தேர்ச்சி பெற்றவர்கள், புதிதாய் தங்கள் விசு வாச வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களை நீடிய பொறுமையுடனும், அன் போடும், சாந்தத்துடனும் அவர்களை கர்த்தருக்குள் வழி நடத்துங்கள். நீங்கள் இருபது வருடங்களில் வளர்ந்த வளர்ச்சியை ஒரே ஆண்டில் அவர்களிடம் எதிர்பார்க்காதிருங்கள்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள பரலோக தந்தையே, என் பெலவீன நேரங்களிலே நீர் என்னைத் தாங்கி, ஏந்தி, சுமந்து, தேற்றி வந்தீர் அது போலவே நானும் மற்றவர்களை தேற்றி திடப்படத்தும் மனப்பக்குவத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:35-39