புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 18, 2021)

இயேசு இல்லாத வாழ்வு

யோவான் 15:5

ஆண்டவர் இயேசு சொன்னார்: என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.


ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்த போது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரி யர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கிய மானதைக் கண்டு, திரும்பிவந்து, உர த்த சத்தத்தோடே தேவனை மகிமை ப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முக ங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத் திரஞ்செலுத்தினான்; அவன் சமாரிய னாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நி யனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். இன்றைய நாளிலே விசுவாசம், கீழ்படிவு, நன்றியறிதல், இரட் சிப்பு என்னும் வார்த்தைகளை குறித்து தியானம் செய்யுங்கள். இயேசு வினிடத்தில் வந்த பத்து குஷ்டரோகிகள் அவரிடத்தில் சுகம் பெற்றுக் கொள்ளும்படியாய் வந்தார்கள். தாங்கள் நாடும் ஆரோக்கியம் அவரி டம் உண்டு என்று விசுவாசித்திருந்தார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டவர் இயேசு அவர்களுக்கு கூறிய போது, அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சென்றார்கள். அதன்படி ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால், அதில் ஒன்பது பேருக்கு நன்றியறி தலின் எண்ணம் இல்லாதிருந்தது. அவர்கள் உடல் ஆரோக்கியத்திற் காக இயேசுவிடம் வந்தார்கள், அதை பெற்றவுடன் அப்படியே சென்று விட்டார்கள். பிரியமானவர்களே, நீங்கள் ஏன் ஆண்டவர் இயேசுவை நாடித் தேடுகின்றீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். இந்த உலக ஆசீர்வாதங்களையும் சரீர சுகத்தையும் பெற்றுக் கொள்வதற்காகவா? இவைகள் ஒருநாள் அழிந்து மண்ணோடு மண்ணாக போய்விடும். நம்முடைய ஆத்துமாவை நித்திய மரணத்திலிருந்து மீட்கும்படியாக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். இயேசு இல்லாமல் நாம் பர லோகத்திற்கு செல்ல முடியாது. (யோவான் 14:6). எனவே நன்றியுள்ள இருதயத்தோடு, “இயேசுவே நீர் எனக்கு வேண்டும்” என்று அவரையே பற்றிக் கொள்ளுங்கள். ஆன்மீக இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அழைத்த தேவனே, அழிந்து போகின்ற இந்த உலக ஆசீர்வாதங்களுக்காக நான் கிரியைகளை நடப்பிக்காகமல் அழியாத நித்திய பரலோக ஆசீர்வாதங்களை நாடித் தேடும்படிக்கு என் மனக் கண்களை பிரகாசமுள்ளதாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:27