புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 17, 2021)

ஸ்தோத்திரம் செலுத்துங்கள்

1 தீமோத்தேயு 2:1

எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;


ஒரு மாணவனானவன், கணித பாடத்திலே மேலதிக உதவியை பெற்றுக் கொள்ளும்படிக்கு ஊரிலே இருக்கும் ஒரு கணித ஆசிரியரிடம், மாலை நேர வகுப்பிற்கு சென்று வந்தான். சில மாதங்கள் கடந்து சென்ற பின்பு, அந்த ஆசிரியரின் ஒழுக்க நெறிமுறை அவனுக்குப் பிடிக்கவில் லை. என்ன நடந்தது என அவனுடைய பெற்றோர் அவனிடம் கேட்டா ர்கள். அதற்கு அவன்: ஊரிலே எத்த னையோ கணித ஆசிரியர்கள் இருக்கி ன்றார்கள். இவரில்லாவிட்டால் வேறொ ருவரிடம் செல்லுவேன். இவர் என்ன என க்கு சும்மா படிப்பிக்கின்றாரா? சம்பள த்திற்குத் தானே படிப்பிக்கின்றார் என்று பதில் கூறினான். அவனுடைய தகப்ப னானவர் அவனை நோக்கி: மகனே, முத ல்படியாக, பாடங்களை கற்றுக்கொள் ளுவதற்கு, பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை நீ கனப்படுத்த வேண்டும். அதற்கு மனத்தாழ்மையும் கீழ்ப்படிதலும்; இன்றியமையாதது. அந்த மனப்பக்குவம் இல்லாத மாணவர்கள் வாழ்க்கையில் ஒன்றையும் கற்றுக் கொள்ள வேண்டிய பிரகாரம் கற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, கடைசி நாட்களிலே, மனிதர்களுடைய சுபாவங்கள் எப்படியாக இருக்கும்? அவற்றுள் சில: மனிதர்கள் வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், கீழ்ப்படியாத வர்களாயும், நன்றியறியாதவர்களாயும், இணங்காதவர்களாயும், நல்லோ ரைப் பகைக்கிறவர்களாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள் ளவர்களாயும் இருப்பார்கள். இன்றைய நாட்களிலே சில தேவ பிள்ளை கள்கூட இப்படிப்பட்ட சுபாவமுள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். அந்த மாணவனானவன் கூறியது போல இன்று சிலர், தங்கள் வாழ்விலே பிர யாசப்பட்ட தேவ ஊழியர்களைக் குறித்து பேசிக் கொள்கின்றார்கள். “அவர் ஊதியம் இல்லாமலா பிரயாசப்பட்டார்?, இவர் இல்லாவிடின் இன்னுமொருவரை பார்த்துக் கொள்ளலாம்! இந்த ஊரிலே எத்தனை யோ ஆலயங்கள் உண்டு” என்று நன்றியற்ற வார்த்தைகளை துணிகர மாக பேசுகின்றார்கள். நீங்களோ அப்படிப் பேசாமல், உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயி ருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அன் போடு அவர்களுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, எங்களுக்காக பிரயாசப்படுகின்றவர்களுக்காக விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோ த்திரங்களையும் ஏறெடுக்கும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:12-13