புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 16, 2021)

கிறிஸ்துவின் சாயலில் பெருகுங்கள்

யோவான் 17:22

நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் என க்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.


“ஊர்க்குருவி உயரே பறந்தாலும் பருந்து ஆகாது” அதுபோலவே நீ எப்போதுமே சாதாரண தொழிலாளியாகவே இருப்பாய் என்னைப் போல இயக்குனராக வரவே முடியாது. என்னுடைய அந்தஸ்து என்ன! என்னுடைய அனுபவம் என்ன! என்று ஒரு தொழிற்சாலையிலே வேலை பார்த்த இயக்குனர் அங்குள்ள ஒரு தொ ழிலாளியைப் பார்த்து கூறினார். இப்ப டியாக இந்த உலகிலே, கல்வி, சமுக அந்தஸ்துக்கள் அடிப்படையில் பல தரா தரங்கள் வகுகப்பட்டுள்ளது. சில இட ங்களிலே சிறுமைப்பட்டோர் எவ்வளவு முயற்ச்சி செய்தாலும், அவர்கள் ஒடுக் கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். ஊழியன் ஊழியனாகவும் எஜமானன் எஜமானனாகவும் இருப்பான். ஆனால் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவு மாகிய நம்முடைய எஜமானனாகிய இயேசு இந்த உலகத்தின் போக் கில் மனிதர்களை பார்க்கின்றவர் அல்ல. 1. நாம் யாவரும் தம்மைப் போல மாறும்படிக்கு, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மை த்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ் த்தினார். 2. நாம் எப்போதும் அவரோடு இருப்பதையே அவர் விரும்புகி ன்றார். “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” என்று கூறியிருக்கின்றார். 3. அவர் மறுபடியும் வந்து நம்மை தம்முடன் சேர்த்துக் கொள்ளும் வ ரைக்கும் நம்மோடு என்றென்றைக்கும் இருக்கும்படிக்கு சத்திய ஆவி யாகிய தேற்றரவாளனை நமக்கு தந்தருளினார். எனவே இந்த உலகத் தின் போக்கினால் மனந்தளர்ந்து போகாதபடிக்கு, ஆண்டவர் இயேசு வின் அன்பிலே நிலைத்திருங்கள். இந்த உலகமும் அதன் போக்குக ளும் அழிந்து போகும். ஆனால் ஆண்டவராகிய இயேசுவில் நிலைத் திருக்கின்றவர்கள் என்றென்றும் அசையாதிருப்பார்கள்.

ஜெபம்:

அப்பா பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவிகாரத்தை தந்த தேவனே, இந்த உலகத்தின் போக்கினால் நான் சோர்ந்து போகாமல், தேவ சாயலிலே அனுதினமும் வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:7