புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 15, 2021)

கர்த்தருடைய வழியை கைக்கொள்

சங்கீதம் 37:34

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுத ந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார். துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.


இந்த தேசத்தின் ராஜா முன்னெடுக்கும் செயற்பாடுகள் இளந்தலை முறையினரின் எதிர்காலத்தை பாதிக்கப் போகின்றது. குடி மக்கள் நெறி முறையற்று போகப் போகின்றார்கள். என்னுடைய பிள்ளைகள் எப்படி யாக வாழப் போகின்றார்கள் என்று ஒரு மனிதனானவன் தன் நண்பர்க ளோடும், உறவினாரோடும் அவ்வப்போது பேசிக் கொள்வான். இப்படிப்பட்ட பேச்சு அவனுடைய வாழ் வில் வழக்கமாயிற்று. அவனுடைய கருத்தின்படி, சிறியவர்களாக இருக் கும் தனது ஐந்து பிள்ளைகள் கெட்டுப் போனால் அதற்கு இந்த ராஜாவே காரணம் என்று இப்போதே நிச்சயித்துக் கொண்டான். ஒரு நாள் அவன் இவ்வ ண்ணமாக தன் கருத்துக்களை பேசும் போது, அவனுடைய பாட்டனார் அவனை அழைத்து, மகனே, தேசத்தின் ராஜா எத்தனையோ கோடிக்கணக் கான குடி மக்களை ஆளுகை செய்கி ன்றார்;. தேசத்தின் தேசாதிபதிகள் இல ட்சக்கணக்கானோரை ஆளுகை செய்கி ன்றார்கள். நகர முதல்வர்கள் ஆயிரக் கணக்கானோரை ஆளுகை செய்கின்றார்கள்;. முறைப்படி அவர்கள் தங்கள் கணக்கை தேவனிடம் கொடுப்பார்கள். ஆனால், நீயோ உன் வாழ்க்கைக்குரிய கணக்கை கொடுக்க வேண்டும். உன் பிள்ளைகள் உனக்கு கட்டுப்பட்டிருக்கின்றார்கள். பொல்லாதவர்களைக்குறித்து எரிச் சலடையாதே நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள் ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண் டைப்போல் வாடிப்போவார்கள். கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். பிள்ளைகள் நடக்கவேண்டிய வழியிலே அவர்களை நடத்து. அவர்கள் முதிர்வயதிலும் அதை விடாதி ருப்பார்கள் என்று அவனுக்கு அறிவுரை கூறினார். ஆம்! பிரியமான வர்களே, பொதுவாக மனிதர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இரு க்கும் காரியங்களையும், தங்கள் பொறுப்புக்களையும் மறந்து விடுகின் றார்கள். அதனால் வரும் பின்விளைவுகளையும் பாதகங்களையும் மற்ற வர்கள் மேல் பழி சுமத்திவிடுகின்றார்கள். நாம் அவ்வண்ணமாக வாழா மல், கர்த்தருடைய வழியிலே நிலைத்திருக்கும் போது, அவர் நம்மேல் கண்ணோக்கமாயிருந்து நம் ஆத்துமாவை காத்து வழி நடத்துவார்.

ஜெபம்:

பாதுகாக்கும் தேவனே, நான் என் சுயபுத்தியின்மேல் சாயாமல், என் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உம்முடைய வழிகளிலே நான் நிலைத்திருக்கும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 3:1-10