புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 14, 2021)

கர்த்தருக்குச் சொந்தமானவைகள்

சங்கீதம் 24:1

பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.


ஒரு பெரிய தோட்டத்திற்குச் சொந்தக்காரனாயிருந்த மனிதன் ஒருவன், தன் தோட்டத்தை பராமரிக்கும் பொறுப்பை சில மனிதர்களுக்கு கொடு த்துவிட்டு, கொஞ்சக் காலம் தூர தேசத்திற்கு சென்றிருந்தான். அந்த மனிதர்களோ, தங்கள் விருப்பப்படி தோட்டத்தை பல பங்குகளாக்கி, அவரவர் தங்கள் இஷ்டப்படி அதை பராமரித்து வந்தார்கள். காலங்கள் கடந்து சென்றபின்பு, அந்த தோட்டத்தின் சொந்தக்காரர் யார் என்பதை மறந்து, அதைக் குறித்த உணர்வற்ற வர்களாக மாறிவிட்டார்கள். சிலர் தங் கள் ஆளுமைகளைக் குறித்து மேன் மைபாராட்டி வந்தார்கள். சிலர் தோட் டத்தின் சொந்தக்காரரை குறித்து ஏள னம் செய்தார்கள். நாட்கள் நிறைவே றிய போது, அந்த தோட்டத்துச் சொந் தக்காரர் வந்து, தன் தோட்டத்தின் நிலையை கண்டு, அவர்கள் யாவரையும் நியாயந்தீர்த்தார். பிரியமான வர்களே, பூமியிலுள்ள அதன் ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விரு தாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட் டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடு வோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண் டவர் அவர்களை இகழுவார். அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்ப ண்ணுவார். இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியா யாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவி யுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். குமாரன் கோபங் கொள்ளாம லும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்த ஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரி யும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” என்று கர்த்தருடைய ஆளுகையைக் குறித்து பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. தேவனாகிய கர்த்தர்தாமே இவற்றை அறிந்து கொள்வதற்கு நம்மு டைய மனக்கண்களை வெளிச்சமாக்கியிருக்கின்றார். கர்த்தராகிய இயேசு மறுபடியும் வரும் நாளிலே, அவர் முன்னினையில் நாம் பாக்கியம் பெற்றவர்களாக காணப்படும் பொருட்டு, தேவன் நம்மிடம் தந்த பொறு ப்பை மனத்தாழ்மையோடு நிறைவேற்றுவோமாக.

ஜெபம்:

சகலமும் படைத்த தேவனே, ஆயிரமாயிரமான உமது பரிசுத்த வான்களோடுங்கூட நீர் வரும் நாளிலே, உமக்கு முன்பாக பாக்கியம் பெற்றவனா(ளா)க காணப்படும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யூதா 1:15