புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 13, 2021)

தேசத்திற்காக ஜெபம் செய்யுங்கள்

தானியேல் 2:21

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்;


இன்றைய நாட்களிலே பல மனிதர்கள் அரசாங்கங்களையும் அதிகாரங்களையும் குறித்து விமர்சிப்பதுண்டு. இது சில மனிதர்களின் பொழுது போக்காக இருக்கின்றது. இந்த பூமியிலுள்ள எந்த ஸ்தாபனங்களானா லும், அதிகாரங்களானாலும், அரசாங்கங்களானாலும் அங்கே சில நிறை வுகளும் சில குறைவுகளும் உண்டு. ஒரு தொழிற்சாலையிலே வேலை செய்யும் தொழிலாளி தன் விருப்பத்திற்கேற்ற ஒரு மேற்பார்வையாளர் இருந்தால் நல்லது என்று விரும்புகின் றான். அது போலவே தேசத்தின் குடி கள் தங்களுக்கேற்ற அதிகாரங்களை யும் அரசாங்கங்களையும் விரும்புகின் றார்கள். இதனால் மனிதர்கள் இன்று பல குழுக்களாக பிரிந்து விடுகின்றா ர்கள். இன்று நீங்கள் வேதத்தை தியா னிக்கும் போது நீங்கள் எந்தக் குழுவை சேர்ந்தவர்கள் என்பதை சிந்தித் துப் பாருங்கள். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் உலகத் துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். உலகத்தின் பார்வையிலே நாம் சிறுமையா னவர்கள். பெரும் குழுவான மனிதர்கள் மத்தியிலே நாம் ஒரு பொரு ட்டாக எண்ணப்படுவதில்லை. நாம் அற்பமானவர்கள், எதையும் நம்மால் சாதித்துக் கொள்ள முடியாது என்று சில தேவ பிள்ளைகள் எண்ணிக் கொள்கின்றார்கள். நம்முடைய பெலத்தால் நாம் ஒன்றும் செய்ய முடி யாது என்பது உண்மை; ஆனால் நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து வினாலே எல்லாவற்றையுஞ்செய்ய நமக்கு பெலனுண்டு. பராக்கிரமமு ள்ள பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், இஸ்ரவேலிலே இரு ந்து சில தேவ பிள்ளைகளை கைதிகளாக கொண்டு சென்றான். பாபி லோனியரின் பார்வையிலே அற்பமாக எண்ணப்பட்ட அந்த தேவ பிள் ளைகள் வழியாக, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்தாமே ஆளுகை செய்கின்றவர் என்பதையும்;, தாமே மெய்யான தேவன் என்பதை யும் பாபிலோனின் ராஜாவிற்கு தேவன் வெளிப்படுத்தினார். எப்படி யாக அந்த வாலிப பிள்ளைகள் கர்த்தரின் கரத்தில் கருவிகளாக இருந் தார்கள்? அவர்கள் என்னதான் நடந்தாலும் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசத்தை விட்டுவிடாதவர்கள். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிகி ன்றவர்கள். வன்முறைகளை விரும்பாதவர்கள். அந்நிய காரியங்ளால் தங்களை தீட்டுப் படுத்தாதவர்கள். தினமும் தேவனை நோக்கி ஜெபிப்ப வர்கள். அப்படியே நீங்களும் தேவனுடைய குழுவைச் சார்ந்தவர்களாக, உங்களைத் தாழ்த்தி, தேசத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, அதிகாரங்களையும் ஆளுகைகளையும் குறித்து விமர்சிக்காமல், மனத்தாழ்மையோடு உம்மை நோக்கி தேசத்திற்காக ஜெபிக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 நாளாகமம் 7:14