புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 12, 2021)

உங்கள் காப்புறுதி எங்கே?

சங்கீதம் 62:5

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.


மேற்கத்தைய நாடுகளிலே வாழும் மனிதர்களில் சிலர், குழந்தை பிறந்து குறிப்பிட்ட சில நாட்களுக்குள், குழந்தை வளர்ந்து பல்கலை க்கழகத்தில் படிப்பதற்கு தேவையான செலவை சந்திக்கும் பொருட்டு, காப்புறுதியை (Insurance) பதிவு செய்து, மாதாந்தம் கட்டுப்பணத்தை செலுத்திக் கொள்கின்றார்கள். இந்த மனப்போக்கானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்றது. அது மட்டுமல்ல, பிள்ளைகள் வளர் ந்து வரும் போது, அவர்கள் எதிர்கா லத்தில் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்துடன், அவர்கள் பிழைத்துக் கொள்வதற்காக பல வழிகளை உண் டுபண்ணி வைக்கின்றார்கள். இவை களை குறித்து விமர்சிப்பது இன் றைய தியானத்தின் நோக்கமல்ல. மாறாக உங்கள் காப்புறுதி எங்கே இருக்கின்றது? என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். மனிதர்கள் இந்த உலகத்தினால் கொடுக்கப்படும் காப்புறுதிகளில் அதிக நம்பிக்கை வைப் பதினால், தேவனாகிய கர்த்தர்மேல் கொண்ட விசுவாசத்தைவிட்டு வழு விப் போய்விடுகின்றார்கள். பெருந்தொகையான பிள்ளைகள் உண்பத ற்கு ஆகாரமின்றி, உடுப்பதற்குத் தகுந்த ஆடைகளின்றி, தங்குவதற்கு ஏற்ற உறைவிடமின்றி நாள்தோறும் வறுமையினால் வாடுகின்றார்கள். என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப் போம் என்று வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் குறித்து கவ லைப்படாதிருங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்க, சில மனிதர்களோ தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் இருபது ஆண்டு களுக்கு பின் நடக்கவிருக்கும் காரியங்ளைக் குறித்து அதிக கவலைய டைகின்றவர்களாக இருக்கின்றார்கள். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவது மில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயி ருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. திட்டமிட்டு வாழ்வதில் தவறில்லை ஆனால் திட்டங்களை வாய்க்கச் செய்யும் கர்த்தரை மறந்து போய்விடாதிருங்கள். சமுத்திரத் திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, தாம் தெரிந்துகொண்ட ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண் ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்கும் சர்வ வல்லமையுள்ள தேவன் பேரில் நம்பிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நீரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர் என்பதை மறந்து உலக போக்கில் போய்விடாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ஏசாயா 43:18-21