புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 11, 2021)

விசுவாசித்தவளே பாக்கியவதி

லூக்கா 1:45

விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.


இஸ்ரவேல் தேசத்திலே, கலிலேயா என்னும் நாட்டில்; நாசரேத் என்னும் ஒரு சிறிய கிராமம் இருந்தது. கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை. நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாக க்கூடுமா? என்னும் வழக்கச் சொற்கள் அந்நாட்களிலே ஜனங்கள் மத் தியிலே இருந்தது. அந்தக் கிராமத்திலே, மரியாள் என்னும் கன்னிகை இருந்தாள். ஒரு நாள், அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த் தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்தி ரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்ப ட்டவள் என்றான். அற்பமாக எண் ணப்பட்ட நாசரேத்து என்னும் கிரா மத்திலே, எளிமையான வாழ்க்கை வாழும் ஸ்திரீயாகிய அவளிடம் தேவ தூதனை சந்திக்க முன்போ அல்லது சந்தித்த பின்போ, இந்நாட்களிலே ஆசீர்வாதங்கள் என்று பெயர் பெற்றிருக்கும் திரளான ஆஸ்திகளோ, உயர்ந்த கல்வி, உலக அந்தஸ்து எவையும் அவளிடம் இருந்ததில்லை. ஆனால் அவளிடத்திலே மனத்தாழ்மையும், நிபந்தனைகள் இன்றி பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் மனப்பக்குவமும் இருந்தது. “கர்த்தர் தம்முடைய அடிமையின் தாழ் மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று அவள் பாடினாள். பிரியமானவர்களே, பாக்கியம் பெற்றவர்கள் யார்? ஆசீர்வதிக்கப்பட்டவர் கள் யார்? என்பதை இன்று சற்று சிந்தித்துப் பாருங்கள். தன் வாழ்க் கையில் நடக்க இருக்கும் காரியங்கள் எப்படியாக ஆகும் என்பதையும், தான் செல்ல வேண்டிய பாதை இன்னதென்பதையும் அறியாதிருந்தும், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து தேவசித்தம் தன்னில் நிறை வேற தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு நல்ல பாத்திரமாகவும் நம் யாவரு க்கும் ஒரு முன் உதாரணமுள்ள ஸ்திரீயாகவும் திகழ்ந்தாள். அது போ லவே, நம் ஒவ்வொருவருக்கும் தேவனால் கொடுக்கப்பட்ட பணி உண்டு. இன்று உங்களிடம் ஆஸ்தியோ, கல்வி, அந்தஸ்தோ இருக்க லாம் அல்லது இல்லாதிருக்கலாம். மனத்தாழ்மையுடன் தேவனுடைய வார்த்தையை நிபந்தனை ஏதுமின்றி விசுவாசித்து, அவருடைய சித்தத் திற்கு தங்களை ஒப்புக் கொடுக்கின்றவர்கள் பாக்கியம் பெற்றவர்க ளாக இருக்கின்றார்கள். அவர்களே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் களும் நித்திய ஜீவனை பற்றிக் கொள்கின்றவர்களுமாயிருக்கின்றார்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலக போக்கின்படி ஆசீர்வாதங்கள் என்று பெயர் பெற்றிருப்பவைகளைத் தேடாமல், உம்முடைய திருச் சித்தத்தை நிறைவேற்றும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 11:40