புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 10, 2021)

மன நிறைவோடு பணி செய்யுங்கள்

லூக்கா 16:10

கொஞ்சத்திலே உண்மை யுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்,


ஒரு ஊரிலே, எளிமையான வாழ்க்கை வாழும் தேவ ஊழியர் தனக்கு கொடுக்கப்பட்ட தேவ பணியை பணிவோடு நடப்பித்து வந்தார். ஆலயத்தின் ஆராதனைகள் யாவும் ஒரு ஓலை கொட்டிலிலே நடை பெற்று வந்தது. அவ்வழியாக கடந்து செல்லும் சில கிராமத்து மக்கள், அந்த கொட்டில் பக்கமாக தங்கள் தலையை திருப்பிக் கொள்ள கூட விரும்புவதில்லை. அவர்கள் ஆண்டவராகிய இயேசுவை அறியாதவ ர்கள் ஆனால் ஆண்டவர் இயேசுவை அறிந்த சிலரும் கூட, தங்களுக்கும் அந்த சிறிய சபைக்கும் எந்த சம்ப ந்தமும் இல்லை என்பது போல நடந்து கொண்டார்கள். இங்கெல்லாம் நம்முடைய நேரத்தை செலவிடுவதில் எந்த பிரயோஜனம் எமக்கு கிடை க்காது என்றும் சிலர் தங்கள் பிள்ளை களை அங்கு செல்வதற்குகூட அவர் கள் அனுமதிக்காதிருந்தார்கள். ஆனாலும், அந்த சபையிலே, ஊழியரு க்கு உதவியாக இருந்த ஒரு வாலிபன், தனக்கு கொடுக்கப்பட்ட சிறிய பொறுப்புக்களை மிகவும் உற்சாகத்துடனும், மனநிறைவோடும் செய்து வந்தான். தான் யார் என்றும், தன்னுடைய சபை இன்னதென்றும், தன் ஊழியர் எவர் என்றும் சொல்லிக் கொள்வதில் அவன் வெட்கம் ஏதும் அடையவில்லை. கண்ணீரோடு விதைக்கின்றவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள். அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே என்ற தேவ வார்த்தைகளில் விசுவாசம் கொண்ட அந்த மின~ரி ஊழியர், சற் றும் சலித்துப் போகாமல், தேவன் தனக்குக் கொடுத்த பணியை ஊக்கத் தோடு செய்து வந்தார். பிரியமானவர்களே, இன்றைய தியானத்தில் நீங்கள் உங்களது கருத்திற்கு எடுக்க வேண்டியவைகள்: 1. தேவனுக்கு சித்தமானால், காலங்கள் கடந்து செல்லும் போது, அந்த ஊழியமானது வளர்ந்து பெருகி, பெரிதான கட்டிடங்கள் கொண்ட ஆலயமாக மாற லாம் அல்லது அந்த ஊழியம் தொடர்ந்து கொட்டிலிலே இருக்கலாம். கட்டிடங்களும் அதிலுள்ளவைகளும் அழிந்து போகும் ஆனால் தேவன் மேல் தன் விசுவாசத்தை வைத்து, அவருடைய சித்தத்தை செய்பவ னே பாக்கியம் பெற்றவன். 2. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண் ணுகின்ற மற்றவர்கள் மேல் கவனத்தைச் செலுத்தாமல், அந்த வாலிப னைப் போல, உங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறிய பொறுப்புக்களையும் மகிழ்ச்சியோடு நிறைவேற்றுங்கள். கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதி யுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

ஜெபம்:

உமது திருப்பணிக்காக என்னை அழைத்த தேவனே, நீர் என்னை நம்பி கொடுத்திருக்கும் சிறிய பொறுப்புக்களையும் மனநிறைவோடு நிறை வேற்றி முடிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சகரியா 4:10