புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 09, 2021)

நித்தியமானவைகள் எவை?

வெளிப்படுத்தல் 21:4

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடை ப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.


மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல் லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஆனாலும் இந்த உலகிலே மனிதர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த காரியங்கள் தங்கள் வாழ்க்கையிலே நிரந்த ரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். எடுத்துக்காட்டாக, பதவி, அந்தஸ்து, தங்களுடைய பெயர், உலக சொத்துக்கள், ஆரோக்கியம், உறவுகள், நண்பர்கள் இப்படியாக அவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. நிலையற்ற வாழ்விலே நிலையானவைகளை நாடித் தேடுகின் றார்கள். மாறிப் போகும் உலகிலே மாறாதவைகளை வாஞ்சிக்கின்றா ர்கள். அழிந்து போகும் உலகிலே அழி யாதவைகளை பெற்றுக் கொள்ள முடி யாது. வானமும், பூமியும் ஓழிந்து போ கும். பூமியிலே உங்களுக்குப் பொக் கி~ங்களைச் சேர்த்து வைக்கவேண் டாம்; அவைகள் அழிந்து போகும் ஆத லால் பரலோகத்திலே உங்களுக்கு பொக்கி~ங்களைச் சேர்த்து வையு ங்கள்; அவை அழிந்து போவதில்லை. என்று நம்முடைய ஆண்டவரா கிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே பூமியிலே உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாட்களிலே நித்தியமானவைகளைத் தேடுங்கள். அவைகளையே சேர்த்துக் கொள்ளுங்கள். வரவிருக்கும் நிலையான நகரம் (எபிரெயர் 13:14 ), அசைவில்லாத ராஜ்யம் (எபிரெயர் 12:28, தானியேல் 7:14), நித்தியஜீவன் (ரோமர் 2:7), தேவனுடைய கிருபை (சங்கீதம் 103:17) மாறாத தேவ அன்பு (ரோமர் 8:39), தேவனுடைய பரிசுத்தம் (1 பேதுரு 1:15). தேவனுடைய வார்த்தை (மத்தேயு 24:35). நித்திய இளைப்பாறுல் (எபிரெயர் 4:11). இவைகளையே நாடித் தேடு ங்கள். தேவன் ஒருவரே என்றென்றுமுள்ள சதாகாலங்களிலும்; இருக்கி ன்றவராய் இருக்கின்றார் (வெளி 1:18), இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். (எபிரெயர் 13:8). பிரியமான சகோதர சகோதரிகளே, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளது மான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப் பிக்கப்பட்டிருக்கிறீர்களே, ஆகையால் நித்தியமானவரையும், அவர் கொடுக்கும் நித்தியமானவைகளையும் வாஞ்சித்து நாடுங்கள்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, நான் காணும் உலகமும் அதிலுள்ள வைகளும், மாம்சத்தின் ஆசை இச்சைகளும் ஒழிந்து போகும் என்ற உண்மையை என்றும் உணர்ந்தவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:23-25