புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 08, 2021)

ஒருவரோடொருவரின் ஐக்கியம்

1 யோவான் 1:7

அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்


ஒரு சிறிய ஊரிலே, மொத்தமாக ஐம்பது குடும்பங்கள் வசித்து வந்தா ர்கள். அவர்களில் அதிகப்படியானோர், அரச சட்டப்படி, தங்கள் வீடுகளு க்கு மின்சார இணைப்பை முறைப்படி பெற்றிருந்தார்கள். இவர்களு டைய வீடுகள் யாவும், தனித்தனியே, அந்த ஊரின் மின்சார வாரிய தொகுதியுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே ஊரில் பக்கம்பக்கமாக இருந்த ஐந்து வீடுகளில் வாழ்ந்து வந்த நண்பர்கள், ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு மட்டுமே ஊரின் மின்சார வாரிய இணைப்பின் தொகுதியுடன் இணைப்பை பெற்றி ருந்தார்கள். மற்றய நான்கு வீடுக ளும் ஊரின் மின்சார வாரிய தொகு தியுடன் இணைக்கப்பட்டிராமல், அந்த ஒரு குறிப்பிட்ட வீட்டுடன் தங் கள் வீட்டின் மின்சார தொகுதியை இணைத்துக் கொண்டார்கள். இரவு நேரங்களிலே, பார்ப்பவர்களுக்கு, அந்த ஊரிலுள்ள எல்லா வீட்டிலும் வெளிச்சம் இருந்தது. ஆனால் எப்போதெல்லாம், அந்த குறிப்பிட்ட ஒரு வீட்டில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதோ, அந்த வேளைகளிளெல்லாம், மற்றய நாலு வீடுகளிலும் இருள் சூழ்ந்து கொண்டது. ஏனெனில் அந்த நாலு வீடுகளின் வெளிச்சமும், அந்த ஐந்தாவது வீட்டின் மின்சார இணைப்பில் தங்கி இருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, பர லோக யாத்திரிகளாக இந்த பூவுலகிலே வாழ்ந்து கொண்டிருக்கும் உங் களுடைய இணைப்பு யாரில் தங்கியிருக்கின்றது? ஆண்டவராகிய இயே சுவுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கின்றீர்களா அல்லது சிறு குழு வாக கிறிஸ்துவை பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட மனிதனுடன் இணை ப்பை வைத்திருக்கின்றீர்களா? நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்க வேண்டும். தேவன் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவ ரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; (1 யோவான் 1:3,7). அதாவது அவர் வழியாகவே நாம் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்க முடி யும். மாறாக, ஒரு குறிப்பிட்ட மனிதன் வழியாக நாம் தேவனோடு ஐக் கியப்பட்டிருந்தால், அந்த மனிதன் யாராக இருந்தாலும், அவன் வாழ்க் கையிலே பின்னடைவுகள் வரும் போது, அவனோடு இணைக்கப்பட்டி ருக்கும் மற்ற மனிதர்களும் பின்மாற்றமடைந்து விடுவார்கள். என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கின்றான் என்று கர்த்தர் கூறியிருக்கின்றார். அவர் வழியாக உண்டாகும் ஐக்கியமே உண்மையான ஐக்கியம்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய ஜீவ வார்த்தைகளை பற்றிக் கொண்டு உம்முடைய திவ்விய ஒளியிலே நடக்கின்றவர்களாகவும், அவ்வழியாக ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்கவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-6