புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 07, 2021)

தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்

எபிரெயர் 12:6

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்


ஒரு ஊரிலே வசித்து வந்த ஒரு இளைஞன், அவ்வப்போது தன் நண்பர்களோடு ஒன்று சேர்ந்து கிரிகெட் விளையாடுவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள், இவர்கள் யாவருமாக ஒன்று சேர்ந்து, அருகிலி ருந்த ஒரு வீட்டின் பின்புற வேலியைத் தாண்டி, அந்த வீட்டு சொந்தக் காரரின் உத்தரவின்றி அங்கிருந்த மரத்தில் ஏறி சில மாங்காய்களை பறித்துக் கொண்டு சென்று விட்டார்கள். மாலையில் வீடு திரும்பிய இளைஞனை அவனுடைய தகப்பனார் அழைத்து, அவனை கண்டித்து சில தண்டனைகளை வழங்கினார். அப்பா, நான் அல்ல என் நண்ப ர்களே முதலில் சென்றார்கள், அவர்க ளோடு நானும் இருந்தேன் என்று அந்த இளைஞன் தன் தகப்பனான வரிடம் கூறினான். அதற்கு தகப்பனா னவர் அவர்கள் அல்ல, நீயே என்னு டைய குமாரன். நீ நன்மையை கண் டடையும்படி உன்னை நெறிப்படுத்து வது என்னுடைய பொறுப்பு என்று கூறினார். அவன் தண்டனையை பெற் றுக் கொண்டான் என்று கேள்விப்பட்ட மற்றய கூட்டாளிகள் அவனைப் பரி காசம் பண்ணி சிரித்தாhர்கள். பிரியமானவர்களே, இன்றைய தியான த்திலே இரண்டு காரியங்களை உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளு ங்கள். முதலாவதாக: கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக் கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்து போய்விடாதிருங்கள். இரண் டாவதாக: நீங்கள் கர்த்தருடைய சிட்சைக்கு உள்ளாகும் போது, மற்றவ ர்களுக்கு அது நகைப்புக்குரியதாக இருக்கும். இவர்கள் கர்த்தரை நம்பி யிருந்தார்களே! என்று ஏளனம் செய்வார்கள். “அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவு க்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்க ளுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொரு ட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோ~மாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்று பரிசுத்த வேதாகம் கூறுகின்றது.

ஜெபம்:

அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை எனக்குத் தந்த தேவனே, உம்முடைய சிட்சையை அற்பமாக எண்ணாமலும், சோர்ந்து போகாமலும் இருக்க என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:14-16