புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 06, 2021)

கிறிஸ்துவின் ஆவி உங்களில்

மத்தேயு 5:13

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்


உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று முன்னோர்கள் கூறிக் கொண்டது போல, உலகமெங்கும் உணவுப் பண்டங்களிலே உப்பை சேர்த்துக் கொள்வது மனிதர்களுடைய வழக்கமாக இருந்து வருகின்றது. துன்மா ர்க்கமான வாழ்க்கை வாழும் மனிதர்களாக இருந்தாலும், சன்மார்க்கமான வாழ்க்கை வாழும் மனிதர்களாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கையுள் ளவர்களாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ப வர்களாக இருந்தாலும், அவர்கள் கடைக்குச் சென்று உப்பை வாங்கி வரும்போது, உப்பானது, மனிதர்களுடைய வாழ்க்கை முறையை வைத்து அது அதனுடைய சாரத்தை மாற்றிக் கொள்வதில்லை. அதாவது, நல்லவனுக்கு அது நல்லது போலவும், கெட்டவனுக்கு அது கெட்டது போலவும் அதன் தன்மையை மாற்றிவிடுவதி ல்லை. நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கின்றீர்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இயேசுவின் நாமத்திலே நாம் பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியினாலே நாம் சாரமாக்கப்பட்டிருக்கின்றோம். உப்பு அதன் சாரத்தை இழந்து போனால் அது என்னத்திற்கு உதவும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. இன்று சில தேவனுடைய அழை ப்பை பெற்ற மனிதர்கள், தங்கள் பழைய நண்பர்கள் முன்னிலையிலே ஒரு வேஷமும், தங்கள் உறவினர் மத்தியிலே வேறு ஒரு வேஷமும், சபை ஐக்கியத்திலே இன்னுமொரு வேஷமுமாக, இடத்திற்கு தக்கதாக தங்கள் சுபாவங்களை மாற்றிக் கொள்ளுகின்றார்கள். ஞானமாக நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட ஞானமானது தேவனிடத்திலிருந்து உண்டானது அல்ல. தேவனிடத்திலிருந்து உண்டான ஞானத்தில் தேவனுக்கு பயப்படும் பயம் இருக்கும். எந்த சூழ்நிலை யிலும் உப்பானது, தனது தன்மையை எப்படி மாற்றாமல் இருக்கின்றதோ, அதே போலவே எல்லா மனிதர்களின் முன்னிலையிலும் ஒவ் வொரு கிறிஸ்தவனின் வாழ்விலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வின் சாயல் வெளிப்பட வேண்டும். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. பிரியமானவர்களே, எல்லா மனிதர்கள் முன்னிலையிலும் உங் கள் மனத்தாழ்மையையும், பரிசுத்தத்தையும், தெய்வீக அன்பையும் வெ ளிக் காட்டுங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி என்னை வேறுபிரித்த தேவனே, எல்லா மனிதர்களுக்கும் முன்பாக நான் உம்முடைய பிள்ளை என்ற சாட்சியை காத்துக் கொள்ளும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:9