புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 05, 2021)

குடியுரிமை

பிலிப்பியர் 3:20

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது


நீதியின் பாதையிலே நடப்பவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் நடை பெறும் எல்லா காரியங்களிலும் பிரியமாக இருக்க மாட்டார்கள். அநீதி யான சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறும் போது அவைகளினாலே மனவேதனை அடைகின்றார்கள். அதனால் அவர்கள் தங்கள் தேசத் தின் குடியுரிமையை விட்டுவிடுவதில்லை. இந்தப் பூமியிலே, சில மனிதர் கள், பல காரணங்களுக்காக தங்கள் தேசத்தை விட்டு வேறு தேசங்களுக்கு இடம்பெயர்கின்றார்கள். அந்நிய தேச ங்களிலே குடியுரிமையை பெற்ற பின்பு, அங்கேயும் தேவ நீதிக்கு எதி ரான காரியங்கள் நடப்பதை காண்கி ன்றார்கள். கருப்பொருளாவது, மனிதர் கள் தாங்கள் உயிர்வாழும் தேசத்தின் குடியுரிமையை எல்லா விதத்தி லும் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். நாம் நாடுகின்ற பரலோகம் பாவ சாபம் இல்லாத நாடு. சஞ்சலமும் தவிப்பும் அங்கே இல்லை. நித்திய சமாதானமுள்ள இன்ப நாடு. நீதியுள்ள கர்;த்தர் ஆளுகை செய்யும் நாடு. நாமோ அந்த அழிவில்லாத பரம தேசத்தின் குடிமக்களாக அழைப்பைப் பெற் றிருக்கின்றோம். நம்முடைய குடியிருப்பு இந்தப் பூமிக்குரியதல்ல, அது பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அழிவுள்ள இந்த பூமியிலே, வாழும் மனிதர்கள் தாங்கள் தேசத்தின் குடியுரிமைகளை குறித்து மேன்மை பாராட்டுகின்றார்கள். ஒரு வேளை தாங்கள் வாழும் தேசத்தின் சூழ்நிலைகள் தங்களுக்கு சாதகமாக இல் லாதிருந்தால், அவர்கள் தங்கள் தாய் நாட்டைவிட்டு வேறு ஒரு நாட்டி ற்கு சென்றுவிடலாம். ஆனால், ஒரு மனிதனானவன், பரம தேசமாகிய பரலோகத்தின் குடியுரிமையை இழந்து போனால் அவனுடைய நிலைமை என்னவாக முடியும்? இறுதி நாளிலே, பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். தற்காலத்திலே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளை சகித்து, அவரில் நிலைத்திருந்து, கனி கொடுத்து, பிதாவா கிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகின்றவர்கள் தங்கள் பர லோக குடியுரிமையை முழுவதுமாக காத்துக் கொள்வார்கள். எனவே நாம் காணாததை நம்பினோமாகில், இவ்வுலகிலே ஏற்படும் பாடுகளை கண்டு பின்வாங்கிப் போய்விடாதபடிக்கு ஆண்டவர் இயேசுவின் வரு கைக்காக பொறுமையோடே காத்திருப்போம்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென்று நம்மை வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், பரம தேசத்திற்கு ஏற்ற நற்கனிகளை கொடுக்கும் வாழ்வு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:12