புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 04, 2021)

இரட்சிப்பின் கெம்பீரசத்தம்

சங்கீதம் 118:15

நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.


ஒரு மனிதனானவன், தன் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகளைக் குறித்து பல நாட்களாக துக்கித்துக் கொண்டிருந்தான். எப்போதும் துக்க முகத் தோடே அவன் காணப்பட்டான். அதைக் கண்ட அவனுடைய பாட்டனார் அவனை அழைத்து. தம்பி: உன் வாழ்க்கையிலே நீ எதை கொண்டாடு கின்றாயோ, அதுவே உன் வாழ்க்கையில் வளரும். எனவே, தோல்வி ஏற்பட்டது உண்மை, ஆனால் அதையே நாள்தோறும் உன் உள்ளத்தில் தியானித்து துக்கிப்பாயானால், அந்த தோல்வி உன் வாழ்க்கையில் வளர்ந்து அது உன்னை மேற்கொள்ளும். எனவே, வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகளினால் உண்டான படிப்பினைகளை எடுத்துக் கொள். ஆனால் பின்னடைவுகளை விட் டுவிடு என்று அவனுக்கு புத்திமதி கூறி னார். தேவனுடைய தாசனாகிய மோசே, தேவனுடைய ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, செழிப்புள்ள கானான் தேசத்திற்கு வழிநடத்திச் செல்லும் வேளையிலே, கர்த்தர் கூறியபடி மோவாப் தேசத்திலுள்ள மலையிலே அவன் மரித்துப் போனான். தேவனுடைய ஜனங்கள் முப்பது நாள் மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடினார்கள். ஆனால் அவர்கள் அங்கேயே தரித்து நிற்க வில்லை. அவர்கள் தாபரிக்கும் ஊருக்கு தங்கள் பயணத்தை தொடர்ந் தார்கள். பிரியமானவர்களே, நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேக யிருக்கும் ஆனாலும்; அவன் நங்கூரம் தன்னை இரட்சித்த இயேசுவில் இருப்பதால் அவன் தளரந்து போவதில்லை. அவன் தன் துக்கத்திலே நிலை கொண்டிருப்பதில்லை மாறாக அவன் கர்த்தர்மேல் பெலன் கொள்ளுகிறவனானதால், அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகின்றான். அவன் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான். எனவே தேவ சமாதானம் உங்கள் இருதய ங்களை ஆண்டு கொள்ளும்படிக்கு, நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்ப டாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத் திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள் ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைக ளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைக ளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். இரட்சிப்பின் தேவன் நம்மோடிருக்கின்றார்.

ஜெபம்:

என் பெலனான கர்த்தாவே, என் வாழ்வில் ஏற்படும் பின்னடைவுகளை நான் தியானம் செய்யாமல், உம்முடைய வேதத்திலே இரவும் பகலும் தியானமாக இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:6-8