புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 03, 2021)

சந்தேகங்கள் எழும்புகிறதென்ன

வெளிப்படுத்தல் 1:18

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்


கர்த்தருடைய பணிக்காக எத்தனை வருடங்களாக இளைப்பின்றி ஓடினேன், இந்த உலகத்திலுள்ளவைகளை அனுபவிக்காமல் இரவும் பகலும் பிரயாசப்பட்டேன், பல தியாகங்கள் செய்தேன், எத்தனையோ அவனமானங்களையும் நிந்தைகளையும் சகித்தேன் ஆனால் இன்று என்னுடைய நிலை இப்படியாக போய்விட்டதே, என்னுடைய பிரயாச ங்கள் எல்லாம் கணக்கின்றி போய் விட் டதே, கர்த்தர் என்னை கைவிட்டாரோ என்று ஒரு மனிதன் தன் வாழ்க்கை யில் ஏற்பட்ட நெருக்கங்களால் மிகவும் ஒடுங்கிப் போய், தனக்குள்ளே குழப்ப மடைந்திருந்தான். அந்த மனிதனுடைய மனதில் மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கையிலும், இப்படிப்பட்ட சூழ்நி லைகள் ஏற்படுவதுண்டு. பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும் ஆண் டவராகிய இயேசுவை பிடிக்கும்படியாய் வந்த போது, அவரோடு இருந்த சீஷர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடிப்போனார்கள். அவர்க ளிடம் இந்த உலகத்திற்குரிய சொத்துக்கள் அதிகமாக இல்லாதிருந் தாலும், தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டு இயேசுவை பின்பற்றி சென்றார்கள். ஆனால் இப்போது, யூத மத அதிகாரிகளுக்கு பயந்து, கதவைப் பூட்டிக் கொண்டு, தனித்துவிடப்பட்டார்கள். இயேசு இஸ்ரவேலை மீட்டுரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால் பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட் படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள் என்று துக்கமுகமுள்ளவர்களாய் இருந்தார்கள். வாழ்;க்கையில் எல்லாம் முடிந்து விட்டது போன்ற ஒரு நிலை. இந்நிலையிலே, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங் களுக்குச் சமாதானம், நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதய ங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? என்று கேட்டார். ஆம் பிரிய மானவர்களே, இப்படியாகவே ஒரு சமயம் தேவனுடைய ஜனங்களும் கர்த்தர் எங்களை கைவிட்டார், ஆண்டவர் எங்களை மறந்தார் என்று சொல்லிக் கொண்டார்கள். அதற்கு கர்த்தர்: ஸ்திரீயானவள் தன் கர்ப்பத் தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை என்று அவர்களுக்கு கூறி னார். எனவே, வாழ்க்கையில் ஏற்படும் சூழ்நிலைகளைக் கண்டு சோர் ந்து போய்விடாதிருங்கள். நாம் சேவிக்கும் நம்முடைய கர்த்தர் மரண த்தை ஜெயித்தவர். அவர் ஒரு போதும் தம்முடையவர்களை கைவிடு வதில்லை. விசுவாசத்திலே நிலைத்திருங்கள். சமாதானம் தரும் கர்த்த ர்தாமே சதாகாலங்களிலும் நம்மோடு இருக்கின்றவராய் இருக்கின்றார்.

ஜெபம்:

உம்முடைய உள்ளங்கைகளில் என்னை வரைந்திருக்கிற தேவனே, எந்த சூழ்நிலையும் உம்முடைய அன்பைவிட்டு என்னை பிரிக்காதென்பதை உணர்ந்து விசுவாசத்தில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 49:13-16