புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 02, 2021)

நீடிய பொறுமையுள்ளவர்களாயிருங்கள்

யோவான் 6:38

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்


இஸ்ரவேலின் ராஜாவாகும்படிக்கு முன்குறிக்கப்பட்ட மனிதனாகிய தாவீ துக்கு பல துன்பங்கள் ஏற்பட்டது. அவன் அந்நியனும் பரதேசியுமாக குகைகளிலும், மலைகளிலும், வனாந்திரங்களிலும், அந்நிய தேசங் களிலும் சஞ்சரித்து வந்தான். அவனு டைய சத்துருக்கள் அவனைப் பார்த்து உன் தேவன் எங்கே என்று நாள் தோறும் நிந்தித்து வந்தார்கள். அந்த அனுபவம் அவனுக்கு தன் எலும்பு களை உருவக்குத்துகிறதுபோல் இரு ந்தது. நம்முடைய ஆண்டவராகிய இயேசு, சிலுவையிலே அறையப்பட் டிருந்தபோது, அந்த வழியாய் நடந்து போகின்றவர்களும், யூத மார்க்கத்தின் பிரதான ஆசாரியரும், வேத வல் லுனர்களும், மூப்பர்களும் அவரை நிந்தித்து பரிகாசம் செய்தார்கள். தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்றும், தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக் கையாயிருந்தானே. அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் மற்றய மனிதர்களுக்கு ஏற்ப்படுவது போலவே துன்பங்கள் ஏற்பட்டாலும், சில மனிதர்கள், நமக்கு துன்பங்கள் ஏற்படும்வரைக்கும் காத்திருந்தவர்கள் போல, துரிதமாகவே நம்மை நிந்தித்து ஏளனம் செய்கின்றார்கள். ஆனால், நாமோ நம்மு டைய கர்த்தராகிய இயேசுவைப் போல, மற்றவர்கள் கூறும் வசைச் சொற்களை தியானம் செய்யாமல், பிதாவாகிய தேவனுடைய சித்தத் தை நிறைவேற்றுவதையே தியானமாக கொண்டிருக்க வேண்டும். நம்மு டைய வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவருடைய சித்தம் நிறை வேற காத்திருக்க வேண்டும். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேக மாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடு விப்பார். பிரியமானவர்களே, இன்று நம்முடைய கர்த்தராகிய இயேசு வின் சிலுவை மரணத்தை நாம் தியானிக்கின்ற வேளையிலே, திவ்விய சுபாவமாகிய நீடிய பொறுமையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. நம்முடைய வாழ்விலும் காரணமின்றி மற்றவர்கள் நம்மை பகைக்கும் போது, கிறிஸ்துவிலிருந்த நீடிய பொறு மையானது, கிரியைகள் வழியாக எம்மில் வெளிப்பட வேணடும்;.

ஜெபம்:

என்னை பெயர்சொல்லி அழைத்த தேவனே, என் வாழ்விலே, உண்டாகின்ற உயர்விலும் தாழ்விலும் உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு பொறுமையோடு முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 27:39-43