புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 01, 2021)

மனத்தாழ்மை

யோவான் 13:15

நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.


சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக, பஸ்கா பண்டிகைக்கு முதல்நாள், இராத்திரியிலே, தம்முடைய சீஷர்களோடுகூட இயேசு போஜனம் பண்ணுகையில்; அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்க ளுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லா ரும் இதிலே பானம்பண்ணுங்கள். இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக் காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக் கைக்குரிய என்னுடைய இரத்தமாயிரு க்கிறது என்றார். கர்த்தராகிய இயேசு தாம் மறுபடியும் வருமளவும், இதை அவ ருடைய நினைவாக செய்யும்படிக்கு திருவிருந்தை ஏற்படுத்தினார். இந்த திருவிருந்தை ஏற்படுத்தினவரைப் போல நாம் மாற வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாக இருக்கின்றது. அவர் தேவனுடைய ரூபமாயி ருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடு த்து, மனு~ர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றி வைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீ~ருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். பின்பு அவர் கூறுகையில், நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழு வினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக் கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் என்றார். கருப்பொருளாவது, தாழ்மையில்லாமல் ஒருவனும் தேவனுக்கு பிரியமாக இருக்க முடியாது. மனத் தாழ்மையில்லாதவன் கிறிஸ்துவை உடையவன் அல்ல. உங்கள் மனத்தாழ்மையினால் உங்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை மன்னியுங்கள். நீங்கள் செய்த குற்றங்களுக்காக மற்றவர்களிடமிருந்து மனத்தாழ்மையோடு மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கின்ற தேவனே, நான் மேட்டிமையான சிந்தைகளைகளைந்து விட்டு, ஏக சிந்தையுள்ளவனா (ளா)ய், இயேசுவைப் போல வாழ வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:29