புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 31, 2021)

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

ஏசாயா 1:18

உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.


சேற்றில் விழுந்த ஒரு வாலிபனை காப்பாற்றும்படிக்கு அவனுடைய உற்ற நண்பர்கள் சிலர் பல முயற்ச்சிகளை செய்தார்கள். அந்த வாலி பன் சேற்றில் அதிகமாக புதைந்;து விட்டதாலும், அந்த நிலம் சதுப்புள் ளதாகவும், பரந்த பிரதேசமாகவும் இருந்ததால், தங்கள் உயிருக்கே இனி ஆபத்து வரும் என்ற நிலை யில் தாம் தப்பித்துக் கொள்ள வேண் டும் என்று அவர்கள் அவனை விட் டுவிட்டார்கள். இவ்வண்ணமாகவே துன்மார்க்க உளையிலே மூழ்கியிரு க்கும் மனிதர்களை விடுதலையா க்கும்படிக்கு மனிதர்கள் முயற்ச்சி யெடுப்பதுண்டு. பின்னர், இவன் படுகுழிக்குள் விழுந்துவிட்டான் இனி நாம் நம்மை பாதுகாக்க வேண்டும் என்று மனிதர்கள் தங்கள் முயற் ச்சிகளை விட்டுவிடுவதுண்டு. கர்த்தராகிய இயேசுவோடு இரண்டு குற்ற வாளிகள் சிலுவையிலே அறையப்பட்டிருந்தார்கள். அவர்கள் அக்கால த்திலே இருந்த வல்லமைமிக்க ரோம ராஜ்யத்தினால் குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்டு சிலுவையிலே அறையப்பட்டார்கள். அவர்களுக்கும் மரணத்திற்கும் சொற்ப நேரமே இருந்தது. அவர்கள் தங்கள் குற்றத் திலே மரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் தன் குற்றத் தைக் குறித்து மனம் வருந்துகின்றவனாகவும், தேவனுக்கு பயப்படுகின் றவனாகவும், இயேசுவை விசுவாசிக்கின்றவனாகவும் இருந்தான். அவர் களுடைய குற்றங்களுக்காகவும் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்த இயேசு சிலுவையில் அவர்கள் அருகே தொங்கிக் கொண்டிருந்தார். பாடுகளும், நிந்தையும் அவமானமும் சகித்தவராய் அவர் தொங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், தன்னை வேண்டிக் கொண்ட குற்றவா ளியை மன்னித்து அவனுக்கு மறுவாழ்வு கொடுத்தார். துன்மார்க்கன் துன்மார்க்க உளையிலே அழிந்து போவது தேவனுடைய சித்தமல்ல. ஆழமான படுகுழி போன்ற பாவ சேற்றிலே கிடந்தாலும், தம்மை நோ க்கி பார்க்கின்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்குபடி ஆண்டவர் இயேசு சித்தமுள்ளவராகயிருக்கின்றார். ஒருவேளை இந்த உலகின் வாழ்வு முடிந்து போனாலும், மறு உலகிலே நித்திய வாழ்வை பெற்றுக் கொள் ளும் வழியை நமக்கு காண்பிக்கின்றார். உங்கள் பாவங்கள் சிவேரென் றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, மனிதர்கள் அன்பு மட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் உம்முடைய அன்பின் ஆழம் அளவிடமுடியாதது. உம்முடைய மாறாத திவ்விய அன்பிற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 23:39-43