புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 30, 2021)

கிறிஸ்துவின் பாடுகள்

1 பேதுரு 4:14

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்;


இந்த நாட்களிலே, உலகம் முழுவதும் அநேக ஜனங்கள், இயேசு கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்து அதிகமாக தியானிக்கின்றார்கள். கிறிஸ்துவின் பாடுகளை நாம் ஏன் தியானிக்க வேண்டும்? அவர் இத்தனை பாடுகள் பட்டாரே என்று அவருக்காக புலம்பி அழுவதற்காக அல்ல. ஏனென்றால், கர்த்தராகிய இயேசு பாடுகள் படும் போது, திரள் கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவரு க்குப் பின்சென்றார்கள். இயேசு அவர் கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று கூறினார். கிறிஸ்துவின் பாடுக ளை நாம் தியானிக்கும் போது, அவர் ஏன் இத்தனை பாடுகளை பட்டார் என்ற கேள்வியை நாம் நம்மிடத்தில் கேட்க வேண்டும். அந்தப் பாடுகளின் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நானும் நீங்களும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காக, இத்தனை பாடுகளை அவர் பட்டார். அந்த பாடுகளின் வழியாக நமக்கு உண்டான விலை மதிக்க முடியாத இரட்சிப்பை நாம் கருத்துடன் காத்துக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு, நாளுக்கு நாள் கிறிஸ்துவின் சாயலிலே நாம் மறுரூ பமாக்கப்பட வேண்டும். தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழும் போது, இந்த உலகத்தால் நமக்கு பல உபத்திரவங்கள் உண்டாகும். இவ்வண்ணமாகவே, இயேசுவின் சீ~ர்கள் நற்செய்தியை அறிவித்ததி னால், அன்றிருந்த மதத்தலைவர்களின் சங்கத்தால் கடிந்து கொள்ளப் பட்டார்கள். ஆலோசனை சங்கத்தினர், இயேசுவின் சீ~ர்களை பிடித்து, அவர்களை அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதெ ன்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். சீ~ர்களோ, இயேசுவின் நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திர ராக எண்ணப்பட்டபடியினால், சந்தோ~மாய் ஆலோசனைச் சங்கத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளி லேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். ஆம் பிரியமானவர்களே, நீங்கள் இயேசுவின் பாடு களை தியானிக்கும் போது, அவரைப் போல மாறத்தக்கதாய், நன்மை செய்து பாடனுபவிக்கத்தக்கதாய், அவருடைய சாயலிலே தினமும் வளரத் தக்கதாய் உங்களை ஒப்புக் கொடுத்து தியானியுங்கள்.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்த பிதாவே, உம்முடைய திருக் குமாரனாகிய இயேசுவைப் போல அனுதினமும் அவருடைய சாயலிலே வளரும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 5:40-42