புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 29, 2021)

பரம யாத்திரை

யோவான் 14:3

நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.


அழகான நீலக் கடலிலே, கம்;பீரமான பல தட்டுக்களைக் கொண்ட உல்லாசக் கப்பல், அமைதலாக கடலிலே ஓடிக்கொண்டிருந்தது. அதி லுள்ள பயணிகள் பெரும் மகிழ்ச்சியுள்ளவர்களாக காணப்பட்டார்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டேலைப் போல பல வசதிகளும், சலுகைகளும் அங்கே காணப்பட்டது. பார்வையை கவரும் வகைவகையான உணவு பண்டங்கள் இருந்தன. ஆடல் பாடல் மற்றும் பல களியாட்டங்கள் யாவும் முறையே நடந்து கொண்டிருந்தது. இவை யாவும் 30 வினாடிகள் நீடித்த விளம்பரத்தில் நேர்த்தியாக காட்டப்பட் டது. ஆனால், அந்த உல்லாசப் பயண த்திலே கடலிலே ஏற்படக்கூடிய பயங் கரங்கள், ஆபத்துக்கள், கடல் ஒவ்வாமைகள், தொற்று நோய்கள் போன்றவற்றைப் பற்றி எதையும் கப்பல் பயண முகவர்கள் விளம்ப ரப்படுத்த மாட்டார்கள். எனினும், பயணிகள் அந்த அபாயங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு, அதற்குரிய கட்டணத் தொகையை கொடுத்து, பயணத்தை மேற்கொள்கின்றார்கள். நம்முடைய பரம தேசத்தின் பயணம், இத்தகைய உல்லாச பயணத்திற் குரிய விளம்பரத்தை போன்றதல்ல. நமக்கு வரவிருக்கும் பலன் ஈடு இணையற்றது. பரம தேசத்திலே அளவில்லாத பேரின்பம் உண்டு. நித்தியர் இயேசுவோடு நீடுழி வாழும் பாக்கியத்தை அடைவோம். அங்கு சென்று சேரும் வரைக்கும், நாம் இந்த உலகத்திலே வாழ்வதி னால், எமக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் நாம் திடன் கொள்ள வேண்டும். உலகத்தை ஜெயித்தவர் நம்மோடு இருக்கின்றார். உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள் என்று நம்முடைய ஆண்டவர் கூறியிருக்கின்றார். இப்படியாக நம்முடைய பயணத்தில் ஏற்படக்கூடிய எதிர்ப்புக்களை கர்த்தர் நமக்கு முன்கூட்டியே அறியத் தந்திருக்கின்றார். அத்துடன் அவர் நம்மை விட்டுவிடவில்லை, நாம் சத்திய வழியிலே நட க்கும்படிக்கு, நம்முடனே என்றென்றைக்கும் இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் நமக்கு தந்தருளியிருக் கின்றார். மேலும், “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப் போகிறேன்; நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணி னபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படியாக, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு வாக்குரைத்திருக்கின்றார்.

ஜெபம்:

அன்புள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் பரலோகம் வந்து சேரும்வரை இந்த உலகத்திலே இருக்கும் பாடுகளை மேற்கொள்ளத்தக்கதாக நீர் எங்களுக்குத் தரும் பெலத்திற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 4:13