புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 27, 2021)

உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்

1 யோவான் 5:4

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும் நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.


மோசே என்ற மனிதனானவன், தேவனுடைய ஜனங்களை அடிமைத்தன த்திலிருந்து வழிநடத்திச் செல்லும்படிக்கு தேவனாகிய கர்த்தருடைய அழைப்பை பெற்றிருந்தான். மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்;. எகிப்திலே மோசேயைக் கொண்டு, தேவ னாகிய கர்த்தர் பலத்த அற்புதங்களைச் செய்தார். தேவன் கூறிய பிரகாரமாக மோசே நடந்து கொண்ட போது, பெரி தான அதிசயங்கள் நடைபெற்றது. அற்பு தங்களையும், அதிசயங்களையும் கண்ட அதே ஜனங்கள், அடிமைத் தனத்திலி ருந்து விடுதலை பெற்ற பின்பு, மோசே க்கு விரோதமாக முறுமுறுத்து, பல முரட்டாட்டங்களை செய்தார்கள். சாந்த குணமுள்ள மோசே பெலனற்று போகும்படிக்கு அந்த ஜனங்களுடைய முரட்டாட்டமானது அவ்வளவாய் கொடூரமாய் இருந்தது. பிரியமா னவர்களே, இன்றைய நாளிலே இந்த சம்பவத்தை சிந்திக்கும் போது, இரண்டு காரியங்களை குறித்து தியானம் செய்யுங்கள். முதலாவதாக: வனாந்திரம் போன்ற இந்த உலக யாத்திரையிலே, ஊழியம் செய்வது மிக இலகுவான காரியம் அல்ல. அதாவது, இந்த உலகத்தாலும், பொல் லாங்கனாகிய பிசாசானவனுடனும் ஒவ்வொரு கணப்பொழுதும் நமக்கு போராட்டம் உண்டு. அந்த போராட்டங்களோடு, ஒரு விசுவாசி இன்னும் அதிக போராட்டங்களைக் கூட்டிக் கொண்டால், அந்த விசுவாசி, யாருக்கு உதவி செய்கின்றான்? சிந்தித்துப் பாருங்கள். இரண்டாவதாக: கானகப் பாதையாகிய இந்த உலக வாழ்க்கையிலே உபத்திரவங்கள் உண்டு. சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருக்க மாட்டாது, ஆனால் உலகத்தை ஜெயித்த கர்த்தரோ எப்போதும் நம்முடைய பட்சத்தில் இருக்கின்றார். சாதகமற்ற சூழ்நிலையில் அவருடைய வார்த்தையை பற்றிக் கொண்டு வாழ்வோமாக இருந்தால், உலகத்தை ஜெயித்துக் கொள்வோம். மாறாக நாம் முரட்டாட்டம் செய்வோமாக இருந்தால், அதன் முடிவானது நமக்கு அழிவாகவே இருக்கும். பகையை உண்டாக்கும்படியல்ல, பகையை அகற்றி சமாதானத்தை உண்டுபண்ணும் பொருட்டே நாம் அழைக்கப்பட் டிருக்கின்றோம். பிரச்சனைகளுக்கு காரணர்களாக இருக்கும்படியல்ல, சமாதானக் காரணர்களாக இருக்கும்படிக்கே நாம் அழைப்பை பெற்றி ருக்கின்றோம். எனவே, முரட்டாட்டங்களையும் முறுமுறுப்பையும் நமமை விட்டு அகற்றி உலகத்தை ஜெயங் கொள்ளுவோம்.

ஜெபம்:

வெற்றி தரும் தேவனே, மாம்சத்தின் எண்ணங்களுக்கு இடங் கொடுத்து, பிரச்சனைகளை இன்னும் அதிகரிக்காதபடிக்கும், உம்முடைய ஆவிக்கு இடங் கொடுத்து பிரச்சனைகளை மேற்கொள்ள கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:14-16