புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 26, 2021)

மனப்பூர்வமாய் சேவை செய்யுங்கள்

கொலோசெயர் 3:24

எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.


ஐயா போதகரே, ஊழியம் செய்யும்படியல்லவோ வந்தேன், ஆனால் உப த்திரவங்களை தாங்க முடியவில்லை. எவ்வளவு நன்மை செய்தாலும் நன்றியறிதலை காணமுடியவில்லை. இதிலிருந்து என்னை விட்டுவிடுங் கள் என்று உதவி ஊழியம் செய்யும் ஒரு மனிதனானவன் தன் மனதிலு ள்ளதை உள்ளபடி வயதான தன் தலைமைப் போதகரிடம் கூறிக் கொ ண்டான். வயதான போதகரோ அவனை நோக்கி: தம்பி, இப்படி கொஞ்சம் உட் காரு. நீ திறந்த மனதோடு உள்ளதை பேசுவதைக் குறித்து நான் பாராட்டுகின் றேன். மந்தைகளை மேய்த்து செல்லும் போது, கடும் வெயில், கடும் குளிர், பெரும் மழை, புயல்க்காற்று போன்ற சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. தாவீது என்னும் இளைஞன் தன்; தகப்பனுடைய ஆடு களை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்து க்கொண்டது. ஆனால் அவன் அதைத் தொடர்ந்துபோய், அதை அடி த்து, ஆட்டை அதின் வாய்க்குத் தப்புவித்தான்;; வனவிலங்குகள் அவன் மேல் பாய்ந்தபோது, அவன் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டான். அதுபோலவே, இந்த உலகத்திலே வாழும் மந்தை களாகிய விசுவாசிகள் பலதரப்பட்ட சூழ்நிலைகளை எதிர்நோக்குகின் றார்கள். சில வேளைகளிலே அவற்றினால் பயந்து, மிரண்டு போய்விடு கின்றார்கள். அது மட்டுமல்லாமல், அவர்களை வஞ்சிக்கும்படி, ஒநாய் களைப் போலவும், கெர்ச்சிக்கின்ற சிங்கங்களைப் போலவும் பிசாசா னவன் சுற்றித்திரிகின்றான். அவற்றிலிருந்து அவர்களை காத்துக் கொள் ளும்படி மேய்ப்பனானவன் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். பிசாசானவனின் தந்திரங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் எப்போதும் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்தவர்களாக சேவை செய்ய வேண்டும். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல் லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். நீ யார் என்பதை அறிந்து கொண்டு, தேவனுடைய ஊழியனாக இரு. தேவ பயத்தோடு நீ கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவி த்தாயானால், சுதந்திரமாகிய பலனைக் கர்த்தராலே பெற்றுக் கொள் வாய் என்று அறிவுரை கூறினார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உபத்திரவங்களைக் கண்டு பயந்து, நீர் தந்த பொறுப்புக்களை தள்ளிவிட்டு ஓடிப் போய்விடாதபடிக்கு, நீடிய பொறுமையுள்ளவனாக சேவை செய்ய பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:10-15