புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 25, 2021)

அன்பும் ஒழுக்கமும்

எபிரெயர் 12:6

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்


குழந்தை பருவத்திலே, ஒரு குழந்தையானது, ஒரு நாளைக்கு எத்தனை முறை தன்னை அசுத்தப்படுத்திக் கொண்டாலும், அதன் தாயானவள் அதை சுத்தப் படுத்தாமல் இருப்பாளோ? குழந்தை தன் தாய் சுத்தப்படு த்துவதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு தாயானவள், தன் குழந்தையை கழுவி சுத்தமாக வைத்திருப்பாள். சிறு பிராயத்திலே, அயலிலுள்ள சிறுவர்களோடு ஓடிவி ளையாடும் ஒரு பிள்ளையானது, அய லிலுள்ளவர்கள் பேசும் தகாத வார்த் தைகளை பேசும் போது, ஒரு தகப்ப னானவர் அதை பாராமுகமாக விட்டுவி டுவாரோ? சிறு பிள்ளைக்கு அது ஒரு கசப்பான அனுபவமாக இருந்தாலும், அதை அழைத்து, அது விட்டுவிட வேண்டிய தகாத வார்த்தைகளை குறி த்து, ஒருமுறை அல்லது இரண்டு முறை தயவாக புத்திமதி கூறுவார். அதை அந்தப் பிள்ளை கேளாது போனால், தன் பிள்ளையை உண்மையாக அன்பு செய்யும்; தகப்பனான வர் அப்படியே விட்டுவிடுவாரோ? தன் பிள்ளையை கண்டித்து, தண்டி த்து, அது நடக்க வேண்டிய ஒழுக்கத்திற்குள் நிச்சயமாக கொண்டு வருவார். அதுபோலவே நம்மில் அன்பு கூரும் நம்முடைய பரம பிதாவும், நல்ல தாயைப்போலவும், நல்ல தந்தையைப் போலவும் இரு ந்து நமக்கு அறிவுரை கூறி, கண்டித்து, தண்டித்து, ஆற்றித் தேற்றி நடத்தி வருகின்றார். எனவே, நாம் நம்முடைய பிள்ளைகளை அதிகமாக அன்பு செய்கின்றோம் என்று கூறி, நம்முடைய பிள்ளைகளை ஒழுங்கு படுத்த வேண்டிய நேரத்தில் அவர்களை நெறிமுறைப் படுத்தாவிட் டால் அது உண்மையான அன்பு அல்ல. அது போலவே, பிள்ளைகளும் தாய் தந்தையின் ஆலோசனைகளை தள்ளிவிட்டு, தாங்கள் விரும்பிய பிரகாரமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு, தாங்கள் பெற்றோரை நேசிக்கின்றோம் என்று அவர்கள் கூறினால் அந்த அறிக்கையில் உண்மை இருக்காது. நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொ ண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலை த்திருப்பீர்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். தேவ கற்பனைகளானது, நாம் அவருடைய வழியிலே நடப்பதற்கு, நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக்குகின்றது. எனவே அன்பு இருக்கும் இடத்திலே ஒழுக்கம் இருக்க வேண்டும்

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என் வாழ்வை நெறிப்படுத்தும் உம்முடைய வேதத்தை நான் என் வாழ்வில் கைக்கொண்டு, உம்முடைய அன்பிலே நிலைத்திருக்கும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:9