புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 24, 2021)

பிரியமான போர்ச் சேவகன்

மத்தேயு 5:11

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழி களையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்க ளானால் பாக்கியவான்க ளாயிருப்பீர்கள்.


தன்னுடைய தேசத்தின் பட்டாளத்திலே சேவைக் காலத்தை முடித்து வீடு திரும்பிய போர்ச் சேவகனுடைய சரீரத்திலே பல இடங்களிலே தழு ம்புகளை கண்ட அவனுடைய மகனானவன், தன் தகப்பனை நோக்கி: அப்பா, உங்கள் சரீரத்திலே இருக்கின்ற தழும்புகள் என்ன என்று கேட் டான். அதற்கு அந்த போர்வீரன்: மகனே, இந்தத் தழும்புகளை பார்க்கி ன்ற மற்றவர்களுக்கு இது வெறும் காயங்களினால் உண்டான தழும் புகள். ஆனால் எனக்கோ, அவை என் தாய் நாட்டிற்குரிய தேசப்பற் றின் அடையாளங்கள். அவற்றை தரி த்திருப்பது என் பாக்கியம் என்றான். இன்று மனிதர்கள் தங்களுக்கு ஏற்ப ட்ட சோகக் கதைகளை அவ்வப்; போது அசைபோட்டுக் கொள்வார் கள். அவற்றை பேசும் போது அதிலே ஒரு சோகம் இருக்கும். ஆண்டவராகிய இயேசுவுக்கு என்று ஊழியம் செய்தேன் அல்லது ஊழி யத்திற்கு ஆதரவாக இருந்தேன், அதனால் பலர் எண்ணற்ற ஆசீர்வாத ங்களை பெற்றார்கள் ஆனால் அவர்களால் எனக்கு உண்டான நோவு களைப் பாருங்கள் என்று சில விசுவாசிகள் கூறுவதை நாம் கேட்டிருக் கின்றோம். இப்படிப்பட்ட அறிக்கையானது, மனப்பூர்வமாக தன் எஜமா னனுக்கு சேவை செய்யும்படி தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு நல்ல போர்ச்சேவகனின் அறிக்கை அல்ல. கர்த்தராகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் பாவமில்லாத பரிசுத்தர். நன்மையேயன்றி தீமையை அறியாதவர். மனித குலத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும்படி, அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்ப டுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனு க்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்மு டைய வாயைத் திறவாதிருந்தார். பிதாவே, உம்முடைய சித்தப்படி என க்கு ஆகட்டும் என்று தம்மை ஒப்புக் கொடுத்தார். அவ்வண்ணமாகவே, நாமும் பிதாவின் சித்தம் நம்மில் நிறைவேற நம்மை ஒப்புக் கொடுத்தி ருந்தால், கிறிஸ்துவின் சுவிசே~த்தின் நிமித்தம் நமக்கு உண்டாகும் துன்பங்களானது நமது வாழ்வின் சோகக் கதையல்ல. அதனால் உண் டாகும் தழும்புகளை நாம் ஆனந்த பாக்கியம் என்று எண்ணக்கடவோம்.

ஜெபம்:

உண்மையுள்ளவனெ(ளெ)ன்று கருதி என்னை அழைத்த தேவனே, தற்காலத்திலே ஏற்படும் பாடுகளை இயேசுவைப் போல சகித்து, உம்மு டைய திருச்சித்தத்தை நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 53:1-12