புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 23, 2021)

சகிப்புத் தன்மை பெருகுவதாக

1 பேதுரு 3:17

தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.


பாடசாலையிலே படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கே பலதரப்பட்ட சக மாணவர்களையும், வேறுபட்ட பல ஆசிரியர்களையும் சந்திக்கின் றார்கள். அவர்களின் பாடசாலை வாழ்க்கையிலே, பாடசாலை அதிபர் கள், உப அதிபர்கள் மாற்றப்படுகின்றார்கள். பாடசாலையிலே பல வைபவங்கள் நடைபெறுகின்றது. சில மாணவர்கள் சில குறிப்பிட்ட ஆசிரியர்களை அதிகமாக விரும்புகின் றார்கள். சிலர் ஏதோ காரணத்தினால் சில ஆசிரியர்களை அதிகமாக விரும்பு வதில்லை. சில மாணவர்களுக்கிடை யிலே பல தகராறுகள் ஏற்படுகின்றது. இப்படியான பல சூழ்நிலைகளின்; மத்தி யிலே பாடசாலைக்கு சென்று வரும் ஒரு மாணவன், ஒரு நாள் மனக் குழப்ப த்தோடு வீடு திரும்பினான். பாடசாலை யில் தனக்கு நடக்கும் சில சம்பவங்கள் தன்னை அதிகமாக குழப்புகின்றது அதனால் பாடசாலைக்கு செல்வது எனக்கு விருப்பமில்லாமல் இருக்கின்றது என தன் பெற்றோரிடம் கூறி னான். அவன் தந்தையார் அவனை அழைத்து: மகனே, பலர் கூடிவரும் இடங்களிலே பலவிதமான சம்பவங்கள் நடைபெறும். அவற்றுள் சில நமக்குப் பிரியமுள்ளதாயும், சில வெறுப்புள்ளதாகவும் இருக்கும் ஆனால் நீ உன் பாடங்களில் மட்டுமல்ல, உன் ஆளுமையில் வளர வேண்டும் என்றால், சவால்களை எதிர்நோக்கி அவற்றை மேற்கொள்வ தற்கு கற்றுக் கொள்ள வேண்டும். சில கசப்பான அனுபவங்களை சகி த்துக் கொள்ள வேண்டும் என்று நல்ல ஆலோசனை கூறினார். பிரியமா னவர்ளே, இந்த உலகத்திற்குரியவைகளை அடைந்து கொள்ளும்படிக்கு நாம் பல அசௌகரியங்களை சகித்துக் கொள்கின்றோம். பல சவா ல்கள், எதிர்ப்புக்கள் மத்தியிலும் மாணவர்கள் சகிப்புத் தன்மையோடு படிக்கின்றார்கள்;, பெரியவர்கள், மாதாந்த ஊதியத்திற்காக நீடிய பொறுமையோடு உழைக்கின்றார்கள். ஆனால், சபை ஐக்கியத்திலே ஏற்படும் சில சம்பவங்களை ஏன் உங்களால் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றது? மனு~ருக்கு நேரிடுகிற சோதனையேயல் லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. ஒருவரையொரு வர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறி ஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். தீமைக்கு தீமை செய்யாமல், குழப்பமான வேளைகளிலும், தெய்வீக சுபாவங்கள் உங்களில் வெளிப்படுவதாக. இதனால் ஈடு இணையில் லாத கன மகிமையைப் பெற்றுக் கொள்வீர்கள்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, எங்களுக்கு எதிராக வரும் சவால்களை மாம்சத்திலே மேற்கொள்ளும்படி முயற்ச்சிக்காமல், உம்மு டைய வார்த்தையின்படி மேற்கொள்ள கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:3