புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 22, 2021)

சாட்சியாக எழுந்து நில்லுங்கள்

மத்தேயு 10:28

ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


பிரபல்யமான ஒரு கம்பனி ஒன்றிலே, வேலை செய்து வந்த ஒரு தேவ பக்தியுள்ள மனிதனானவன் அண்மையிலே தனக்கு கிடைத்த பதவி யுயர்வை குறித்து சபை ஐக்கியத்திலே சாட்சி பகர்;ந்தான். அந்த கம்ப னியின் உரிமையாளர், ஆண்டவர் இயேசுவை அறியாத மனிதனாக இருந்தான். அந்த உரிமையாளர், வருடாந்தம் செய்து வந்தது போல, இந்த வருடமும், தன்னுடைய மதச் சடங்கு ஒன்றை கம்பனி முழுதும் கொண்டாடும்படிக்கும், அதை ஒருங்க மைப்பதன் பொறுப்பை புதிதாக இய க்குனராக பதவியேற்ற அந்த மனி தனிடம் கொடுத்திருந்தார். அந்த மனித னானவனின் மனதிலே பெரும் குழ ப்பம் ஏற்பட்டு விட்டது. அவனுடைய நண்பர்களில் சிலர், நீ அந்த விழாவை ஒழுங்கமைத்து கொடு, ஆனால் அதிலே பங்கேற்காதே, ஏன் நீ வீணாக இந்த வேலையை இழந்து போக வேண்டும் என்று கூறினார்கள். வேறு சிலர், நீ அன்றைய தினமன்று வியாதிபட்டிருக்கின்றேன் என்று வீட்டில் நின்று விடு என்றார்கள். இராத்திரியிலே அவன் படுத்திருக்கும் போது, திடீரென தேவனுடைய தாசனாகிய தானியேNலைப் பற்றிய ஞாபகம் அவனுக்கு வந்தது. பாபிலோனிய ராஜ்யத்திலே பெரும் பதவியிலே இருந்த அவன் தான் நம்பியிருக்கும் தேவனை தொழுது கொள்ள வேண்டாம் என்றும், அப்படி தொழுது கொள்பவர்கள் சிங்கத்தின் கெபிக்குள் போடப்படுவார்கள் என்றும் அறிந்திருந்தும், தன் தேவனை தொழுது கொள்வதை அவன் நிறுத்தவில்லை. தனக்கு கிடைத்திருக்கும் பதவியையும், தன் உயிருக்கு வரக்கூடிய ஆபத்தையும் அறிந்திருந்தும் அவன் வழமையாக செய்வது போல, தேவனாகிய கர்த்தரையே தொழுது கொண்டான். தானியேல், ஆத்துமாவைக் கொல்ல வல்லவர் களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு அவன் பயப் படவில்லை. ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்ல வரை பயபக்தியுடன் சேவித்து வந்தான். இந்த வார்த்தைகளால் மிகவும் திடன் கொண்ட அந்த மனிதனானவன், தான் தேவன் மேல் கொண்ட விசுவாசத்தை கிரியையிலே காண்பிக்க வேண்டிய நேரம் இதுவே என அடுத்த நாள் காலையிலே, நேரடியாக உரிமையாளரின் காரியாலத்தி ற்கு சென்று, சற்றும் தயங்காமல், தன்னுடைய விசுவாசத்தை அறிக்கை யிட்டான். தன் விசுவாசத்திற்கு விரோதமான காரியங்களில் தான் சற்றும் பங்கேற்க மாட்டேன் என்று தயவாக அவரிடம் கூறினான்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, மனிதர்களை பிரியப்படுத்தாமல், உமக்குப் பயந்து, உம்முடைய கற்பனைகளை மனதார கைகொள்ளு ம்படிக்கு எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 12:13