புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 21, 2021)

உங்கள் இருதயமும் எங்கே இருக்கின்றது?

மத்தேயு 6:21

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.


எங்களுடைய பிள்ளைகள், நன்றாக படிக்க வேண்டும், நல்ல உத்தி யோ கத்தை செய்ய வேண்டும், நேர்மையாக உழைக்க வேண்டும், ஆரோ க்கியமாக வாழ வேண்டும் என்னும் விருப்பம் பொதுவாக எல்லா பெற்றோரிடமும் உண்டு. இதிலே என்ன தவறு உண்டு? இது ஒரு நல்ல எண்ணம். இப்படியாக ஒரு பெற்றோர், தங்கள் பையனை, நல்ல பாட சாலை ஒன்றிலே சேர்த்து விட்டார்கள். அவனும் நன்றாக படித்து வந்தான். ஐந்தாம் ஆண்டிலே, கணித பாடம் அவனுக்கு க~;டமாக இருந்தது. ஊரிலே இருக்கும் நல்ல கணித ஆசிரியர் ஞாயிறு காலையிலே கணித பாடத்தை சொல்லிக் கொடுத்தார். அவ ரிடம் உதவி பெறும்படிக்கு, தங்கள் மகனை அங்கே அனுப்ப முடிவெடுத் தார்கள். நாங்கள் காலையிலே ஆலயத்திற்கு செல்லாமல் இனி மாலை யிலே செல்லலாம் என கூறிக் கொண்டார்கள். ஆறாம் ஆண்டிலே, ஒரு சனிக்கிழமையன்று, அவனுக்கு கால் பந்தாட்ட போட்டியிருந்ததால், அன்று சனிக்கிழமை உபவாச ஜெபத்தை விட்டுவிட்டு அவனுடைய கால்பந்தாட்ட போட்டியை பார்க்கச் சென்றார்கள். ஒரு நாள் அவன் பெற்றோரை நோக்கி: திங்கள் காலையிலே தவணைப் பரீட்சை ஆரம் பமாகின்றது, நான் படிக்க வேண்டும் என்றான். பெற்றோர் அவனை நோக்கி: ஞாயிறு மாலை நீ ஆலயத்திற்கு செல்லத் தேவையில்லை, ஒரு ஞாயிறு தவறினால் குற்றமில்லை, நீ வீட்டிலிருந்து படித்துக் கொள் என்று கூறினார்கள். இப்படியாகவே, இந்த உலகத்திலே தாங்கள் உயிர் வாழும்படிக்கும் சரீரத்துக்கு வேண்டிய தேவைகளை சந்திக்கும்படிக்கு, தங்கள் மகனானவனுடைய ஆன்மீக வாழ்வை ஊன்றக் கட்டும் காரி யங்களை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டார்கள். சின்ன வயதிலி ருந்து, அந்த மகனானவன் எதைக் கற்றுக் கொண்டான்? தான் படிப்ப தற்கு, தேவ காரியங்கள் கூட தடையாக வரக்கூடாது; நான் விளையா டும் விளையாட்டுக்கள் தேவ காரியங்களைவிட முக்கியமானது என்று அவன் தன் சிறுவயதிலிருந்தே படிப்படியாக கற்றுக் கொண்டால், அவன் வளர்ந்து தன் வாழ்வில் எதை முக்கியப்படுத்துவான்? பிரியமா னவர்களே, மனு~ன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்;. எனவே பரலோக பொக்கி~த்தை சேர்த்து வைக்கும்படிக்கு அழியாமை க்குரியவைகளை விதையுங்கள். அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, என் வாழ்வில் நான் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்படிக்கு என் வாழ்வின் வழிகளை நீர் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33