புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 20, 2021)

நம்பிக்கையை அறிக்கையிடுங்கள்

எபிரெயர் 10:23

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்;


ஒரு சமயம், பாபிலோன் ராஜ்யத்தை ஆட்சிசெய்த பராக்கிரமமுள்ள நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அறுபதுமுழ உயரமும் ஆறுமுழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, தேசத்தின் அதிகா ரிகளையும், சகல ஜனங்களையும் ஜாதிகளையும் பாi~க்காரருமா னவர்களையும் அழைப்பித்து, தான் செய்து நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளும்படியும், எவனா கிலும் தாழவிழுந்து, அதைப் பணி ந்து கொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளை யின் நடுவிலே போடப்படும் படியும் அவனாலே கட்டளை பிறப்பிக்கப்பட் டது. ஆனாலும் ராஜாவிற்கு பணிவி டை செய்யும்படி, யூதா தேசத்திலே இருந்து, சிறைப்பிடிக்கப்பட்டு வந்த தேவ பிள்ளைகளாகிய சாத்ராக், மே~hக், ஆபேத்நேகோ என்பர்கள் அந்த சிலையை வணங்;குவதற்கு மறுத்தார்கள். ஏனெனில் அவர்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே பணி ந்து கொள்ளுகின்றவர்கள். ராஜா அவர்கள் மேல் உக்கிரகோபங்கொ ண்டு அவர்களை அழைப்பித்தான். அவர்கள் ராஜாவை நோக்கி: நேபு காத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவி ப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக் கடவது என்றார்கள். பிரியமானவர்களே, சிறைக் கைதிகளாக கொண்டு வரப்பட்ட அந்த தேவபிள்ளைகளின் வைராக்கிய வாஞ்சையைப் பாரு ங்கள். பராகிரமமுள்ள ராஜாவின் முன்னிலையிலும் அவர்கள் தங்கள் நம்பிக்கையை சமரசம் செய்து கொள்வதற்கு இணங்கவில்லை. மரண மிரட்லுக்கும் பயப்படவில்லை. இன்று நீங்கள் வேலை செய்யும் இடங்க ளிலும், கல்வி கற்கும் இடங்களிலும், வெளியிடங்களிலும் உள்ள அதி காரிகள் முன்னிலையிலும் உங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுகிற தில் அசைவில்லாமல் உறுதியாயிருங்கள். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய வேதத்திற்கு முரணான செயல்களைச் செய்வதற்கு சற்றும் இடங் கொடுக்காதிருங்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, இவர்கள் கேட்பது இது சின்னக் காரியம் தானே, யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்று உம்முடைய வார்த்தைக்கு விரோதமாக பாவம் செய்யாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 3:12-18