புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 19, 2021)

வைராக்கியம் பாராட்டுதல்

கலாத்தியர் 4:18

நல்விஷயத்தில் வைராக் கியம் பாராட்டுவது நல்லதுதான்,


என்னை அவமதித்த அந்த வீட்டின் வாசற்படியை நான் மிதிக்க மாட் டேன் என்று சபதம் கூறிய ஒருவன், தன் தீர்மானத்திலே மிகவும் வைரா க்கியமாக இருந்து வந்தான். இவ்வண்ணமாகவே ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்திலே தான் நினைத்ததை சாதித்து முடிப் பேன் என்று, நினைத்ததை சாதிக்கும் வரைக்கும் வைராக்கியம் பாராட்டுகின்றார்கள். சிலர் தங்கள் இரு தயத்திலே கொண்டுள்ள பகை, வன்மம், கசப்பு போன்ற சுபாவங்களைக் குறி த்து வைராக்கியம் பாராட்டு கின்றார் கள். இன்னும் சிலர், தங்கள் சமூக அந்தஸ்தைக் குறித்து வைராக்கியம் பாராட்டி, பல மனிதர்களை ஒடுக்கியா ழுகின்றார்கள். சவுல் என்னும் மனிதன் (பின்பு பவுல் என்று அழைக்கப்ப ட்டவர்), தன்னுடைய மதத்தைக் குறித்து மிகவும் வைராக்கியமுள்ள வராக இருந்தார். இவர் ஒரு சன்மார்க்கராக இருந்த போதிலும், தன்னு டைய மதத்தை காக்கும் பொருட்டு, கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தார். அவர் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கி க்கொண்டிருந்தார். ஒரு நாள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவரை சந்தித்தார். அந்நாளிலே அவருடைய வாழ்க்கை முற்றாக மாற்றப்பட் டது. தனக்கிருந்த உலக மேன்மையை குறித்த வைராக்கியத்தை தள்ளிவிட்டு, தன்னைக் குறித்ததான பிதாவாகிய தேவனுடைய சித்த த்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்ப திலே அவர் வைராக்கிய மாக இருந்தார். மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானா லும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களா னாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிரு~;டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயே சுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்று கிறிஸ்துவின் அன்பைக் குறித்து வைரா க்கிமுள்ளவராக இருந்தார். பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கை யிலும் நீங்கள் ஏதோ ஒரு காரியத்திலே, நான் நினைத்ததை செய்து முடிப்பேன்; என்ற வைராக்கியமுள்ளவர்களாக இருந்த சமயங்கள் இரு க்கும். மாம்ச இச்சைகளோ ஒழிந்து போகும் எனவே அவைகளைக் குறித்து வைராக்கியம் பாராட்டாமல், அந்த வைராக்கியத்தை, உங்கள் வாழ்க்கையில் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும்ப டிக்கு பயன்படுத்துங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பரம தந்தையே, பரலோகத்திற்குரிய பொக்கிஷங்களை பெற்றுக் கொள்ளும்படிக்கு, அதிலே வைராக்கிய வாஞ்சையாக இருக்கும்படிக்கு, அதன் மேன்மையை உணரச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:35-39