புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 18, 2021)

கரம் பிடித்து நடத்துகின்ற தேவன்

சங்கீதம் 73:23

ஆனாலும் நான் எப்பொழு தும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகை யைப் பிடி த்துத் தாங்குகிறீர்.


ஒரு மனிதனானவன் தான் செய்யும் வேலையை மிகவும் கருத்துடன் பல வருடங்களாக செய்து வந்தான். பல தடவைகள், சக ஊழியர்களிட மிருந்தும், மேற்பார்வையாளளிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றிருந்தான். அண்மையில், காரியாலயத்திலே இணைந்து கொண்ட சிலர், அந்த நேர் மையான மனிதன்மேல் கண்வைத்து, அவனுக்கு எதிராக அநீதியான காரியங்களை செய்து வந்தார்கள். சில மாதங்களுக்கு பின், அந்த மனி தனானவன் அந்த ஸ்தாபனத்தை விட்டு விலகி, இன்னுமொரு இடத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந் தத்;திற்கு உள்ளானான். அவன் மன திலே, உண்மையாய் வேலை செய்த எனக்கு ஏன் இப்படியான அநீதியான செயல்கள் நடக்க வேண்டும்? என்னை நன்றாக அறிந்த இயக்குனர்கள்கூட எனக்காக பேசவில்லையே என்று மன வேதனைப் பட்டான். சுமார் இரண்டு வருடங்களுக்கு பின், தேசத்திலே ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால், அவன் முன்பு வேலை பார்த்த அந்த ஸ்தாபனம், மிகவும் பாதிக்கப்பட்டது. அந்தக் ஸ்தாபனத்தின் உரி மையாளர்கள், அந்த தேசத்தில் இயங்கி வந்த தங்கள் வியாபார ஸ்தா பனங்கள்; யாவையும் மூடிவிட்டு, அவற்றை இன்னுமொரு தேசத்திற்கு கொண்டு போவதற்கு முடிவெடுத்ததால், அந்த ஸ்தாபனத்தில் இருந்த யாவரும் வேலையை இழந்து போனார்கள். ஆனால், அந்த மனித னானவன் தற்போது வேலை செய்யும் காரியாலயத்திலே பிரச்சனைகள் ஏதுமின்றி வேலை செய்து வந்தான். அந்த மனிதனானவன் மூன்று காரி யங்களை உணர்ந்து கொண்டான்: முதலாவதாக, முன்பு வேலை செய்த இடத்திலே, தான் தேவனுடைய முகத்தை நோக்கிப் பார்ப்பதற்கு பதி லாக, தனக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளின் முகத்தை நோக்கிப் பார்த்தேன் என்றும், இரண்டாவதாக, தான் எப்போதும் தேவனிலே நிலைத்திருக்க வேண்டும் என்பதையே தேவன் விரும்புகின்றார் என் றும், மூன்றாவதாக, கரம் பிடித்து நடத்தும் கர்த்தர் என்னோடு இருக் கின்றார் என்றும் தன்னையும் தன் குடும்பத்தையும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காக்கும் பொருட்டு, என் பழைய வேலை இடத்திலே எனக்கேற்பட்ட தீமையை, தேவன் நன்மையாக மாற்றினார் என்றும் அவன் உணர்ந்து கொண்டான். பிரியமானவர்களே, நாம் தேவனை சார்ந்து வாழும் போது, எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர் நம்மை வலக்கரம் பிடித்து நடத்தகின்றவராயிருக்கிறார்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் என்ற சத்தியத்தை உணர்ந்து வாழும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:28