புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 17, 2021)

திடமனதாயிருங்கள்

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்;. ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்;. ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும் (தானியேல் 2:21-22). அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலி ருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமை யுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபார ங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார் (1 சாமுவேல் 2:8). கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார் (சங்கீதம் 18:2). ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசே~pத்தவர்களாயிருக்கிறீர்கள் (மத்தேயு 10:29 -31). பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. (சங்கீதம் 24:1). கர்த்தர் ராஜரிகம் செய்கின்றார் (சங்கீதம் 97:1) கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம் பண்ணுகிறார். அல்லேலூயா (சங்கீதம் 146:10). பிரியமானவர்களே, இவரே நம்முடைய கர்த்தர். நம்மை தாயின் கருவினிலே தெரிந்து கொண்டவர். என்றென்றும் மாறாதவராயிருக்கின்றார். எனவே, மாறிப் போகும் இந்த உலகிலே, உங்களைச் சூழ உள்ள மனிதர்களின் போக்குகளையும், உங்களை நோக்கி வரும் சவால்களையும் கண்டு மருண்டு போய்விடா திருங்கள். கர்த்தர் ஒருபோதும் தம்முடையவர்களை கைவிடார். எனவே நீங்கள் அவரைவிட்டு விலகாமலும், கர்த்தர் மேல் கொண்டுள்ள விசுவா சத்திற்கு எதிரான வார்த்தைகளை அறிக்கையிடாம லும், கர்த்தரில் உறுதியாய் தரித்திருங்கள்.

ஜெபம்:

ஒரு போதும் என்னை மறவாத தேவனே, என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், நீர் என்னை சேர்த்துக் கொள்வீர் என்ற உண்மையை உணர்ந்து உம்மை பற்றிக் கொண்டிருக்க கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 2:1-9