தியானம் (பங்குனி 16, 2021)
கர்த்தர் நியமித்த ஒழுங்கின்படி...
பிலிப்பியர் 3:11
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
இன்றைய நாளிலே, முன்னோடிகளாக திகழ்ந்த இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பார்ப்போம். முதலாவதாக, மோசே என்னும் மனிதன், பண்டைய எகிப்து என்னும் தேசத்திலே அரண்மனை யிலே வளர்ந்து வந்தார். அன்றைய எகிப்து, இன்றைய நாட்களில் வல்லரசுக்களாகத் திகழும் தேசங்களு க்கு ஒப்பாக இருந்தது. அப்படிப்பட்ட தேசத்திலே, மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்ப ட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்ல வராக இருந்தார். இரண்டவதாக, பவுல் என்னும் மனிதன் பண்டைய ரோம ராஜ் யத்தின் குடியுரிமையுடையவராக இருந் தார். இவர் வேத பிரமாணங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். அன்று யூதர்கள் மத்தியிலே இருந்த பிரபல்யாமான பரிசேயர் என்னும் குழுவை சார்ந்தவர். இவர்கள் இருவரும், உலக முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்களும். சமூக அந்தஸ்து உடையவர்களாகவும், அவர்கள் வாழ்ந்த கால எல்லையிலே மனிதர்கள் மத்தியிலே அங்கீகாரம் பெற்றவர்களுமாக இருந்தார்கள். இவர்கள் இருவரும் கர்த்தருடைய சித்தம் இந்த பூமியிலே நிறைவேறும்படிக்கு அதிகமாக கர்த்தரால் பயன்படுத்தப்பட்டவர்கள். அந்த பயன்பாடானது, அவர்களின் கல்வியறிவாலோ வேத அறிவாலோ, சமூக அந்தஸ்தாலோ அல்லது மனித அங்கீகாரத்தினாலோ ஏற்படவில்லை. மாறாக, கர்த்தர் இவர்களை அழைத்த போது, கர்த்தருடைய சித்தப்படி, கர்த்தர் நியமித்த ஒழுங்கின்டி, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, கர்த்தர் கூறுவதை மட்டும் செய்து முடிக்கும்படி தங்களை முற்றாக அர்ப்பணித்தார்கள். இந்த உலகத்தினால் தங்களுக்கு உண்டான மேன் மைகளை, ந~;டமும் குப்பையுமென தள்ளிவிட்டார்கள். பிரியமான வர்களே, கர்;த்தர் நம்மையும் அழைத்திருக்கின்றார். ஆனால் சில மனித ர்கள், அழைப்பை பெற்ற பின்பு, தாங்கள் நினைத்த பிரகாரமாக, தங்கள் இ~;டப்படி, தங்கள் உலக கல்வி, சமூக அந்தஸ்தின்படி, தேவ சித்தத்தை நிறைவேற்ற முற்படுகின்றார்கள். நாங்கள் கல்வி கற்பதும், பிரயாசப்படுவதும், வேத பிரமாணங்களை முறைப்படி அறிந்து கொள் வதும் நல்லது, ஆனால் கர்த்தருடைய சித்தம், நம்முடைய வாழ்க்கை யிலே, கர்த்தர் நியமித்த ஒழுங்கின்டி, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, கர்த்தர் கூறுகின்ற பிரகாரம் நிறைவேறும்படிக்கு நாம் நம்மை முற்றாக அர்ப்பணிக்க வேண்டும்.
ஜெபம்:
அழைத்த தேவனே, முன்னோடிகளாக திகழ்ந்த பரிசுத்தவான்களைப் போல, நானும் உம்முடைய பூரண சித்தத்திற்கு என்னை ஒப்புக் கொடுத்து வாழ பிரசாமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபிரெயர் 8:5