புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 15, 2021)

சகோதரர்கள் பின்வாங்கிப் போகும்போது

மத்தேயு 8:6

ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக் கொண்டான்.


ஒரு சமயம், இரட்சகராகிய இயேசு கப்பர்நகூம் என்னும் ஊரில் பிரவேசித்தபோது, ரோம பட்டாளத்திலே நூறு படைவீரர்களுக்கு அதிபதியாக (நூற்றுக்கு அதிபதி) இருந்த ஒருவன் அவரிடத்தில் வந்து: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். நூற் றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்ட வரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த் தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனா யிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போ வென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என் றால் செய்கிறான் என்றான். இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பாருங்கள், சரீர வியாதியினால் வாடும் தன் வேலைக்காரனை குறித்து அந்த அதிபதி எவ்வளவாக கரிசனையுள்ளவனாக இருந்தான். தன் வேலைக்காரன், வேதனையோடு மரிப்பதை அவன் விரும்பவில்லை. ஆண்டவர் இயேசுவின் போர்வீரர் களாகிய நாம், பரலோகத்தை நோக்கி ஒடிக்கொண்டிருக்கின்றோம். நம்மில் ஒருவன் பாவம் செய்து, ஆன்மீக நோய் கொண்டு, மரித்துப் போனால் அவன் முடிவு எவ்வளவு பரிதாபமாக இருக்கும்? எனவே, அந்த நூற்றுக்கு அதிபதி, ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசியதைப் போல, நாமும் குற்றத்தில் அகப்பட்டு, மனவேதனைப்படும் சக போர்வீரர்களுக்காக, ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேச வேண்டும். நாம் மற்றவர்களை நியாந்தீர்க்காமல், உண்மையான உள்ளத்தோடு விசுவாசமுள்ளவர்களாய் ஆண்டவர் இயேசுவிடம் கேட்டால், அவர் நம் முடைய ஜெபத்திற்கு பதிலளிக்க உண்மையுள்ளவராக இருக்கின்றார். காலத்திற்கு முன் ஒருவரையும் நியாயந்தீர்க்காமல், ஒழுங்கில்லாதவர்க ளுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீன ரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, பாவம் செய்து பின்வாங்கி இருக்கும் சகோதரர்கள் உம்மைவிட்டு தூரம் சென்று, தங்கள் ஆத்துமாவை கெடுத்துக் கொள்ளாதபடிக்கு அவர்களை காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 4:4-5