புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 14, 2021)

நியமித்த ஒழுங்கின்படி...

1 கொரிந்தியர் 9:24

நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.


ஒரு ஊரிலிருந்த வாலிபன், தேசிய மட்டத்திலே நடத்தப்படும், விளையாட்டுப் போட்டிகளிலே, ஓட்டப் பந்தயப் போட்டியிலே கலந்து கொண்டான். ஓட்டப் பந்தயப் போட்டி ஆரம்பமானதும், அந்த வாலிபன் தனக்கென்று குறிக்கப்பட்ட ஓடு தளத்திலே (Lane) அவன் ஓடிக் கொண் டிருக்கையில், அவன் அருகில் ஓடிய பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன், தனக்கென்று குறிக்கப்பட்ட தளத்தில் ஓடாது, ஓட்டப்போட்டி ஒழுங்குக்கு விரோத மாக ஓடுவதை கண்டு கொண்டான். அதனால் அந்த வாலிபன் தன் ஓட்ட த்தை நிறுத்திவிடவில்லை. அவன் விளையாட்டுப் போட்டியின் ஒழுங்கு முறைப்படி தன் ஓட்டப் பந்தயதளத் தில் ஓடினான். பக்கத்து கிராமத்து இளைஞன் முதலாவதாகவும், இந்த வாலிபன் இரண்டாவதாகவும் ஓட்டப் பந்தயப் போட்டியை ஓடி முடித் தார்கள். விளையாட்டுப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், முதலாம் இடத்தை தட்டிக் கொண்ட பக்கத்து கிராமத்து இளைஞனை பலத்த கரகோ~த்துடன் வாழ்த்தினார்கள். அந்த இளைஞனுடைய கொண்டாட்டம் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது. இரண்டு நிமிடங்களுக்கு பின், ஓட்டப் பந்தயப் போட்டியின் நடுவர்கள், அந்த இளைஞன் தன் தளத்தைவிட்டு தவறி, பிறிதொரு தளத்தில் ஓடியதால், ஓட்டப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டான் என்றும், இரண்டாவதாக ஓடி முடித்த வாலிபன், முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டான் என்றும் அறிவித்தார்கள். ஆம் பிரியமானவர்களே, நாமும் நம்முடைய ஆவிக் குரிய ஓட்டத்திலே, பரலோக பந்தயப் பொருளை நோக்கி ஓடிக் கொண் டிருக்கின்றோம். இன்னும் அநேகர் தாங்களும் அதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் யார் பரிசுப் பொருளை பெற்றுக் கொள்வார்கள்? மற்றய மனிதர்களா அல்லது நாங்களா? யார் நியமித்த ஓட்டத்தில் தேவ ஒழுங்கின்படி ஓடுகின்றார்க ளோ அவர்களே பரிசுப் பொருளை பெற்றுக் கொள்வார்கள். மற்றய மனிதர்கள் அப்படிச் செய்கின்றார்கள், அந்த ஊழியர் இப்படிச் செய்கின்றார் எனவே நானும் அப்படியும் இப்படியும் செய்தால் என்ன? என்று மற்றவர்களுடைய ஓட்டத்தை பார்த்து, நீங்கள் பின்வாங்கிப் போகாதபடிக்கு, நீதியின் கிரீடத்தை பெற்றுக் கொள்ளும்படி நியமித்த ஒழுங்கின்படி பொறுமையோடு ஓடுங்கள். விசுவாத்திலே நிலைத்திரு ங்கள். நீதியுள்ள நடுவராகிய கர்த்தர் அவர் வரும் நாளிலே, அவர் நிய மித்த ஒழுங்கின்படி ஓடிய யாவருக்கும், நீதியின் கிரீடத்தை தந்தருள்வார்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு ஓடிக்கொண்டிருகின்றேன் என்பதை உணர்ந்து, எல்லாவற்றிலும் இச்சையடக்கத்தோடு இருக்கும்படிக்கு என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:7-8