புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 13, 2021)

ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;


இன்று மகனுடைய சம்பள நாள், வீட்டு வாடகையை இன்று மாலை செலுத்தி விடுகின்றேன் என்று ஒரு தாயானவள் வீட்டு சொந்தக் கார ரிடம் கூறினாள். மாலையிலே, வீடு திரும்பிய மகன், குறித்த சம்பளக் காசைவிட மிக அதிகமான தொகையை தன் தகப்பனானவரிடம் கொடு த்தான். தகப்பனானவர் அவனை நோக்கி: இவ்வளவு பணம் உனக்கு எப்படி கிடைத்தது என்று ஆச்சரியத் தோடு கேட்டார். அதற்கு மகனான வன்: இல்லை அப்பா, இன்று முக்கிய மான கிரிகெட் போட்டி நடைபெற் றது. அதற்கு நான் இன்ரநெற் வழி யாக பந்தயம் கட்டியிருந்தேன்;. நான் பந்தயம் கட்டிய அணி ஜெயித்ததால் எனக்கு இரண்டு மடங்கு பணம் கிடைத்தது என்று கூறினான். உன்னுடைய அணி தோல்வியடைந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என தாயானவள் மகனிடம் கேட்டாள். ஏன் அப்;பா, நடக்காத ஒன்றைக் குறித்து அலட்டிக் கொள்கின்றீர்கள். நான்தான் ஜெயித்துவிட்டேனே என் றான். தகப்பனானவர் அவனை நோக்கி: மகனே, வீட்டு வாடகை கட்ட வேண்டும், என்னுடைய மருத்துவ செலவு செலுத்த வேண்டும், உன் தங்கச்சிக்கு கல்லூரி பணம் கட்ட வேண்டும், நாங்கள் நாளாந்தம் உண்ண வேண்டும் என்றும் நாங்கள் உன்னை நம்பியிருக்கின்றோம் என்று நீ அறிந்தும், உன் சம்பளத்தை சூதாட்டத்திலே போடுவதற்கு எப் படி உனக்கு மனம் வந்தது? நீ எங்கள் வாழ்க்கையை சூதாட்டத்திலே பந்தயப் பொருளாக வைத்தாயே, எங்கள் வாழ்க்கை உனக்கு அவ்வ ளவு அற்பமாக தோன்றியதா என்று கேட்டார்;. ஆம் பிரியமானவர்களே, அந்த மகனானவன் செய்தது போல, இன்று சில தேவ பிள்ளைகளும், தங்கள் ஆன்மீக இரட்சிப்பையும் அற்பமாக எண்ணுகின்றார்கள். தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும் எவ்வேளையிலும் விழிப்புள்ளவர் களாகவும் இருப்பதற்கு பதிலாக பாவத்திற்கு வழி வகுக்கும் பழக்க ங்களை மட்டாக செய்வோம் என்று துணிகரம் கொண்டு, பொல்லாங் கனின் கண்ணிக்குள் தங்களை அகப்படுத்திக் கொள்ளக்கூடிய அபாய த்திற்குள் தங்களை அர்ப்பணிக்கின்றார்கள். இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். சகோதரரே, கர்த்தருடைய நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகார கிரியைகளுக்கு செல்லும் வழியிலிருந்து உங்களை விலக்கி, தெளிந்த புத்தியுள்ளவர்களாக ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

இரட்சிப்படைவதற்கென்று எங்களை அழைத்த தேவனே, நீர் தந்த கிருபையின் நாட்களை அற்பமாக எண்ணி, எங்கள் ஆத்துமாவை கெடுத் துக் கொள்ளாதபடிக்கு எங்களை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:1-9