புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 12, 2021)

சிறிய தீமையான வித்துக்கள்?

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.


“எல்லாம் மட்டாக இருக்கட்டும்” என்று பொருட்படும்படி ஆங்கிலத்திலே ஒரு வசனத்தை கூறிக் கொள்வார்கள். அதாவது, உன் ஆகாரத்திலே உப்பும், சீனியும், எண்ணெயும் மட்டாக இருக்கட்டும். மனிதனு டைய வாழ்க்கைக்கு நித்திரை அவசியம், ஆனால் இன்னும் அதிகமாக நித்திரை கொள்வேன் என்று வாழும் மனிதன் சோம்பேறியாக மாறிவிடுகின்றான். தேனைக் கண்டு மட்டாய்ச் சாப்பிடு மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய் (நீதி 25:16). அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு (பிரசங்கி 12:12). சொற் களின் மிகுதியில் பாவமில்லா மற் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான் (நீதி 10:19). குடியனும் போஜனப்பிரிய னும் தரித்திரராவார்கள். (நீதி 23:21). இப்படியாக மனிதன் தன்னுடைய வாழ்க்கையிலே, பல விஷயங்களிலே மட்டாக இருப்பது அவனுக்கு நல்லது. ஆனால் இன்று சிலர் பாவமான காரியங்களை அல்லது பாவத்திற்கு வழி வகுக்கும் காரியங்களையும் மட்டாக செய்து கொண்டால் தவறில்லை என்று ஆலோசனை கூறுகின்றார்கள். அதாவது, பண ஆசை, மதுபான வெறி கொள்ளுதல், நெறிகெட்ட திரைப்படங்களை பார்த்தல், புகைத்தல் போன்றவை மட்டாக இருந்தால் தவறில்லை என்று இவைகளை பாராமுகமாக விட்டுவிடுகின்றார்கள். அது மட்டும ல்லாமல், இப்படிப்பட்ட மாம்ச இச்சைகளை நியாயப்படுத்தும்படிக்கு வேத வசனங்களை புரட்டுகின்றார்கள். ஒரு தகப்பனானவன், தன் மகனை நோக்கி: அந்த மலைப்பாம்பு மிகவும் சிறியதாக இருக்கின்றது. எனவே அதை நீ கூட்டுக்குள் அடைத்து வைத்திரு என்று கூற முடியுமா? குறித்த காலத்திலே, அந்த பாம்பு வளர்ந்து தன்னுடைய சுபாவத்தை வெளிக்காட்டும். கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவ தையும் உப்பப்பண்ணும். பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்க முடியாத இரத்தத்தினாலே மீட்கப்பட்டு, உன்னதமான அழைப்பை பெற்றிருக்கின்றீர்கள்;. எனவே உங்கள் இருத யங்களிலே பொல்லாங்கன் சிறிய விதைகளை விதைப்பதற்கு இடங் கொடாதிருங்கள். அவை மட்டாக, மிதமாக ஆரம்பித்து, காலப்போக் கில் உங்கள் பரிசுத்த வாழ்வைக் குறித்த உணர்வை உங்களை விட்டு முற்றாக அகற்றிவிடும். எனவே இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பாவ சாபத்திலிருந்து விடுதலை தந்த தேவனே, நான் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாதபடிக்கு, எல்லா காரியங்களிலும் எச்சரிக்கையுள்ளவனா(ளா)க வாழ வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:9