புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 11, 2021)

உள்ளத்தின் நினைவுகள்

எரேமியா 17:10

கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய் கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிற வருமாயிருக்கிறேன்.


அன்றைய நாட்களில் இருந்த யூத மார்க்கத்திலே, பரிசேயர் என்ற பிரத்தியேகமான குழுவை சேர்ந்த மனிதர்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் மதத்தையும், அதன் சடங்காச்சாரங்களையும் குறித்து மிகவும் வைராக்கியமுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஜெபம் செய்யும்படி தேவாலயத்திற்கு போனான். பரிசேயனாகிய அவன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனு~ரைப்போலவும், இந்த ஆயக் காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வார த்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசம பாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். இந்தப் பரிசேயனின் பார்வையிலே பறிகாரர், அநியாயக்காரர், விபசார க்காரர் போன்றவர்கள் தேவனு டைய வழியைவிட்டு செல்லுக்கின் றவர்கள் என்று எண்ணிக் கொண் டான். அது உண்மை, அதாவது, தேவனாகிய கர்த்தர் அவைகளை வெறுக்கின்றார். ஆனால், இந்த பரி சேயனுடைய இருதயத்திலே பொல்லாங்கனாகிய பிசாசானவனுடைய குணாதிசயமாகிய “பெருமை” குடிகொண்டிருந்தது. இன்றைய நாட்களி லும், சில தேவனுடைய பிள்ளைகள், புகைத்து, மதுபான வெறி கொள் கின்றவர்களையும், போதைவஸ்துக்களுக்கு அடிமைப்பட்டவர்களையும், நெறிகெட்ட திரைப்படங்களால் தங்கள் மனதை கெடுத்துக் கொள்கின்ற வர்களையும், மோக பாவ இச்சைகளிலே வெளியரங்கமாக செயற்படுகி ன்றவர்களை மட்டுமே தேவனுக்கு பிரியமில்லாத வாழ்க்கை வாழ்கி ன்றார்கள் என எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால், இருதயத்திற்குள் மறைந்திருக்கும், பெருமை, குடும்ப அந்தஸ்து, சமுதாய பாகுபாடுகள், வன்மம், பகை, கசப்பு, எரிச்சல், பொறாமை போன்ற மாம்சத்தின் கிரி யைகள், தேவ பிள்ளைகளாகும்படி அழைக்கப்பட்ட சிலரின் இருதயத் திலே குடிகொண்டிருக்க அவர்கள் இடங்கொடுப்பதால், தேவனை அறிந்திருந்தும், தெய்வீக சுபாவத்திற்கு அந்நியர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். நாமோ அப்படியிராமல், நம் உள்ளத்தை தேவனுக்கு கொடுப்போம்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உள்ளத்தின் நினைவுகளும், நான் பேசும் வார்த்தைகளும் உமக்கு உகந்த திருப்பலியாக இருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-7