புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 10, 2021)

உன்னத அழைப்பைப் பெற்றவர்கள்

2 கொரிந்தியர் 6:16

தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.


உணவுக் கழிவுப் பொருட்களை மட்டுமே உண்ணும் வன விலங்குகளின் இனங்களிலொன்று, இரவு நேரங்களிலே, ஒரு வீட்டின் முற்றத்திற்கு வந்து சென்றது. அந்தப் பகுதியிலே அநேக வீடுகள் இருந்த போதும், அவை குறிப்பாக ஒரு வீட்டின் முற்றத்திற்கு மட்டுமே போக்கும் வரத்து மாக இருந்தது. நாளடைவில், அந்த விலங்குகளில் ஒன்று, அந்த வீட் டில் தன் இருப்பிடத்தை ஏற்படுத்தும்படி வகை தேடியது. பிணம் எங் கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்ற வார்த்தையின்படி, அந்த வீட்டின் சொந்தக்காரன், தன் வீட்டு முற்றத் திலேஅசுத்தங்களையும், கழிவுப்பொ ருட்களையும் விட்டு வைத்ததால், அதை நாடித் தேடும் வனவிலங்குகள் அங்கே வந்து சேர்ந்தன. ஒரு அழ கான பூந்தோட்டமானது, தேனீக்களை கவர்ந்து கொள்ளும்; ஆனால் சாக்க டையான இடத் திலே அசுத்தத்தை விரும்பும் கொசுக்கள் வந்து சேரும். அது போலவே, நம்முடைய வாழ்க்கையிலே அசுத்தங்களையும், பாவ பழக்கங்களையும் கொண்டிருப்போமாகில், அவைகளிலே நாட்டமுள்ள மனிதர்கள் நம்மிடத்திற்கு போக்கும் வரத்துமாக இருப்பார்கள். ஒரு மனிதனானவன், குடித்து வெறிப்பதிலும் களியாட்டுக்களிலும் நாட்டமுள் ளவனாக, தன் வீட்டை ஒரு மதுபான சாலையைப் போல மாற்றினால், அதில் பிரியப்படுகின்றவர்களே அவன் வீட்டிற்கு அநேகமாக வந்து சேர்வார்கள். அது மட்டுமல்ல, தேவனுடைய ஆளுகைக்கு உட்படாத காரியங்கள் யாவும் பொல்லாங்கனாகிய பிசாசானவனுடைய ஆளுகை க்குள் இருக்கின்றது. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவரு கிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. பொல்லங்கன் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொ ன்றுக்கும் வரான். பொல்லாங்கனாகிய பிசாசானவனுடைய ஆளுகை க்கு உட்பட்ட காரியங்கள் இந்த உலகத்தால் அங்கீகாரம் பெற்றதும், மனிதர்களுக்கு தற்காலிகமான சந்தோ~த்தை தருவதைப்போல காட்சி யளிக்கும்; அதன் முடிவோ அழிவாக இருக்கும். எனவே, உலக போக் கிற்கு இடங் கொடாமல், தேவனுடைய ஆளுகைக்கு உட்படாத அசுத்த மானவைகளை உங்கள் வாழ்க்கையைவிட்டு அகற்றி விடுங்கள். பொல் லாங்காய் தோன்றுகின்றவைகளை விட்டு விலகுங்கள். நீங்கள் ஜீவ னுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கின்றீர்கள். தேவன் உங்களுக்கு ள்ளே வாசம் பண்ணி உலாவுகின்றவராய் இருக்கிறார்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, உன்னதமான அழைப்பை அற்பமாக எண்ணாமல், பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகி உமக்கு பிரியமுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:22