புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 09, 2021)

கேளுங்கள் தேடுங்கள் தட்டுங்கள்

லூக்கா 11:9

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள்,அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங் களுக்குத் திறக்கப்படும்.


“தன்னுடைய மகன் பல்கலைக்கழக பாடங்களிலே அதிவிசேஷட சித்தி பெறும்படிக்கு அவனுடைய தாயார் இரவு பகலாக தேவனை வேண்டிக் கொண்டாள்.” “பிரபல்யமான ஸ்தாபனமொன்றிலே வேலை கிடைக்க வேண்டும் என்று ஒரு மனிதனானவன் ஊக்கமாக ஜெபித்து வந்தான்” இப்படியாக ஜெபித்தவர்கள், தாங்கள் எதிர்பார்த்ததிற்கும் அதிகமாக தேவன் கிருபை செய்தார் என்று சாட்சி கூறுவதை நாம் பல முறை கேட்டிருக்கின்றோம். இப்படியாக இன்று தேவ பிள்ளைகள் பல காரி யங்களுக்காக உபவாசித்து ஜெபித்து வெற்றியை கண்டு கொள்கின்றார்கள். தேவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள் வது நல்லது. இவற்றுள் அதிகப்படி யானவைகள், உணவு, உடை, உறைவிடம் மற்றும் இந்த உலக வாழ் க்கைக்குரிய காரியங்களாக இருக்கி ன்றது. அவற்றை நம் பரம பிதா நம க்கு தருகின்றவராக இருந்தால், நம்மு டைய உள்ளான மனிதன் புதிதாக்கப்படும்படி, நம்மிடத்திலிருக்கும் பெல வீனங்களிலிருந்து நாம் விடுதலையடைய வேண்டும் என்று கேட்டால், அதைக் குறித்து நம்முடைய பிதாவாகிய தேவன் எவ்வளவாய் மகிழ்ச்சியடைவார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எடுத்துக் காட்டாக, “பிதாவே, எனக்கு அடிக்கடி கோபம் வருகின்றது, என் உள்ளத்திலே எரிச்சல் இருக்கின்றது. இவைகளிலே இருந்து நான் விடுதலையடைய வேண்டும்” என்று தேவனிடத்தில் கேட்டால் அவைகளை அவர் நிச்ச யமாக அருளிச் செய்வார். ஆவிக்குரிய வாழ்க்கைக்குரிய காரியங் களை தேவ பிள்ளைகள், ஒரு தடவை அல்லது இரண்டு தடவை, தேவனிடம் வேண்டிக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட மறுரூபமடையச் செய்யும் ஜெபங்கள் ஒரு சில நிமிடங்களுக்குள் முடிவு பெற்றுவிடும். பிரியமானவர்களே, சோர்ந்து போகாமல்;, இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று வேதம் நமக்கு அறிவுரை கூறுகின்றது. எனவே, அழிந்து போகின்றவைகளுக்காக அதிகமாக ஜெபிப்போமென்றால், அழியாமைக்குரிய பரலோக பொக்கி~ங்களுக்காக எவ்வளவு அதிக மாக நாம் ஜெபிக்க வேண்டும். கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளு கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். தம்மை நோக்கிக் கூப்பிடுகின்றவர்களுக்கு நன்மையான ஈவுகளை கொடு க்க, பரம பிதா சித்தமுள்ளவராக இருக்கின்றார்.

ஜெபம்:

அழியாமையை தரித்துக்கொள்ளும்படி அழைத்த தேவனே, அழிந்து போகின்ற இந்த உலகத்தின் தேவைகளை குறித்து கவலையடையாமல், பரலோக நன்மைகளை நாடித் தேட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:17